Tuesday, July 17, 2012

போர் பென் யாங்..

நாக்கை மேலண்ணத்தில தாங்கி எச்சில எடுத்து அடித்தொண்டையை நனைச்சுக்கொண்டன், வலக்கையிண்டை அஞ்சு விரலையும் சேர்த்து இடக்கையுக்குள்ள புதைச்சு முறுக்கி விட்டன்.
பின்முதுகில லேசா குளிர் படர கன்னம் இரண்டும் சிலிர்த்திச்சு.
பிறகு கை. அதுக்குப்பிறகு நெஞ்சுப்பக்கம்.
கால் ரெண்டும் ஒட்டினபடி. கை துடையில தாங்கினபடி.

முன்னால இருந்த டாப்சி பாக்கிராளா எண்டு காம்புயுடெரை தாண்டி எட்டிப்பார்த்தன், இண்டைக்கு வெள்ளை ஷர்ட் கொஞ்சம் டைட்டா. போர்டர் கருப்பு. வழமை மாதிரி தலைமுடியை கலைச்சு தவள விட்டுருந்தாள் ,சைடு உச்சி பிரிச்சு நடுவில பட்டர்பிளை கிளிப், பாதி முடி ரெண்டு தோளையும் தாண்டி முன்னுக்கு தவண்டு கொண்டிருந்திச்சு.

வழமை மாதிரியே கையால கோதி விட்டுக்கொண்டிருந்தாள்...

இண்டைக்கும் என்னை பாகேல..

நல்ல வேளை..

முதல் நாள் என்னை அவள்ட இன்றோடியூஸ் பண்னேக்கையும் இதே உடுப்புத்தான், இதே ஹேர் ஸ்டைல்.
இதே மாதிரி என்னை கணக்கெடுக்கேலை,

ஹல்லோ ஐயம் மது,கையை நீட்டினன்,

ரெண்டு கையையும் கூப்பி "சபாய் டீ" எண்டு லேசா குனிஞ்சு எழும்பினாள்.

தலை முடி முன்னுக்கு தவண்டு வந்து பின்னுக்கு போய் தோளை ரெண்டு தரம் தட்டி ஓஞ்சிச்சு, களுத்தில இருந்த சங்கிலியும் ரெண்டு முறை நெஞ்சை தட்டி ஓஞ்சிச்சு, என்ட மனசு மட்டும் ஓயல.

கும்பிட்டுட்டு லேசா பல்லு தெரிய சிரிச்சுக்கொண்டு இருந்ததை கண் வெட்டாமை பாத்துக்கொண்டிருந்தன்,இப்பிடியே இண்டைக்கு முழுக்க பாத்துக்கொண்டே இருப்பமா !!!

அவள் அச்சு அசல் ஆடுகளம் டாப்சியே தான்.

சிரிச்சுக்கொண்டே எண்டை கையை பாத்தாள், ஏதோ கோயில்ல பிரசாதம் வாங்க வந்தவன் மாதிரி நீட்டிகொண்டிருந்தன்,

கரண்ட் அடிச்ச மாதிரி கையை சடாரெண்டு எடுத்து நோண்டியை சமாளிக்க அசட்டு சிரிப்பு.

நானும் கையை கூப்பி வணக்கம் டீ... தமிழன்டா..

வேசாமவள் நோண்டி ஆக்கிடாள், கையை குடுத்தா என்ன குறஞ்சா போயிடுவாள்.

ஒரு நாளைக்கு வரட்டும் நோண்டி ஆக்கி அனுப்புறன்.

மனசு தான் சொல்லிச்சு ஆனா அவள் அதுக்கு பிறகு என்னட்ட வந்து ஏதாவது கேட்டிருந்தா பல்ல இளிச்சுக்கொண்டு போயிருப்பன்,

என்னை மாதிரி பெடியல்ட வீக்நெஸ் அது தானே.அவள் வரேல.

ஒபிசில எண்ட ரூம் சேரன் படம் மாதிரி எப்பவும் அமைதியா தான் இருக்கும். நானும் அவளும் மட்டும் தான்.

ஆனா பக்கத்தில ராஜேஷ் படம், கத்தரிக்காயை மூணு நாள் பிரீசருக்குள்ள வச்சு எடுத்த மாதிரி சூம்பி போயிருக்கும் அவன்ட மூஞ்சி, ஒவ்வொரு டேபிளா போய் கொஞ்ச கொஞ்ச நேரம் மொக்கை போட்டுட்டு வருவான்,
ஒரு நாள் டீ ஊத்திற அண்டி ஊத்தாமை பாத்துக்கொண்டு இருக்க, கத்தரிக்கா வந்து மொக்க போட்டத்தான் அடுப்பே பத்த வப்பன் எண்டுறா,அந்தளவுக்கு, பவர் ஸ்டாரை விட சனியன் ரகளை பண்றான்.

அவன்ட விசயத்தில நான் டாப்சி, கணக்கே எடுகிரதில்ல,

ஆனா அப்பப்ப வந்து மொக்கை போட்டுட்டு போவான்,அவனுக்கெண்டு ஒரு சிரிப்பு வச்சிருக்கன்,அவன் வந்தா போகும் வரைக்கும் அதே சிரிப்புத்தான்,

வருவான் ஏதோ எல்லாம் சொல்லுவான் போவான்..

இன்னொருத்தன் இருக்கிறான். நூடில்ஸ் மண்டையன், பத்து மணி ஆனா காணும் சட்டுப்புட்டேண்டு அவசர அவசரமா எங்கையோ கிளம்பி போயிடுவான்.

கொஞ்ச நேரம் கழிச்சு ஏதோ சந்த்ராயனை ரோக்கேடில விட்டுட்டு வந்தவன் மாதிரி வந்து இருப்பான்,

அவன் எங்க போறான், என்னத்தை சாதிச்சிட்டு வந்து இப்பிடி உட்காருறான் எண்டு இண்டைக்கு வரைக்கும் எனக்கு விளங்கேல.

இண்டைக்கும் காலமை பத்து மணிக்கு போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வந்தான், முகத்தில ஒரே வேர்வை, கங்கி எடுத்து துடச்சுக்கொண்டான்.

ஏதோ பிரச்சினையை முடிச்சிட்டு வந்திருக்கிறான், இண்டைக்கு போய் கேட்டிட வேண்டிய தான்,

டேய் நூடில்ஸ் எனி புறப்லம்??

போர் பென் யான்..மிஸ்டர் மது,

லேசா அசட்டுத்தனமா, கொஞ்சம் கணக்கெடுக்காதனமா,

எனக்கென்ன வந்திச்சு,ஏதாவது பிரச்சினை என்டா கெல்ப் பண்ணலாம் எண்டு தான்,

மற்ற பக்கம் எல்லாம் பெட்டைகள் தான், ரெண்டு மூணு தரம் சீட்டை விட்டு எழும்பி சுச்சுக்கு போறது, அந்த நேரம் அவளுகளை கடக்கன்னால பாகிறது,

இண்டைக்கு காலமை வந்ததில இருந்து அடி வயுத்தில சின்ன மாற்றம், பெரிசா கணக்கெடுக்கேல , ஒரு நாலு மணிக்கு கொஞ்சம் சீரியஸ், ரெண்டு மணில இருந்து குமிரின வயிறு இப்ப கொந்தளிக்க தொடங்கிட்டுது ,

நல்ல வேளை இன்னும் சத்தம் வெளில வரேல,

எப்படா ஆறு மணி வரும்,

வழமையா கலாமை எழும்பி தண்ணி குடிச்சு கிடிச்சு நல்ல வடிவா இருந்திட்டு தான் போறனான், இவ்வளவு காலமும் எனக்கு இப்பிடி பிரச்சனை வந்ததே இல்லை இப்ப மட்டும் ..ஏன்..

சரி வந்தா போய் இருந்திட்டு வாயேன் இதெல்லாம் ஒரு மாட்டரா..
அப்பிடி லேசா சொல்ல கூடிய விஷயமில்ல,

இது எண்ட கௌரவ பிரச்சனை,

ஒபிசுக்கு வந்திட்டு அவசர அவசரமா டொயிலட்டுக்கு ஓடிப்போய்டு மாடர முடிச்சிட்டு வரேக்கை எல்லாரும் ஒரு மாதிரி பாபான்களே எண்டு ஒரு பயம்,

எனக்கு அது கௌரவ குறைச்சல்,

பாழப்போன ஆயிக்கு தெரியுமா எண்ட கௌரவத்தை பற்றி ,

லேசா வெடிக்க தொடங்கீட்டுது,

ஆயி ஆத்திரம் மாதிரி அடக்கி வச்சிருந்தா பிச்சுக்கொண்டு வெளில வந்து நாறடிச்சிடும்,

ஆசன வாயை இறுக்கி பொத்திக்கொண்டன்.மூச்சை நல்லா முதுகுத்தண்டு வழியா இழுத்து துரியத்துக்கு ஏத்தி மூக்கு வழியா ஓயஸ் மூச்சை லேசா விடேக்க கொஞ்சம் ஆறுதலா இருந்திச்சு,

கனகாலமா செய்யாத காயகல்ப்ப பயிட்ச்சியை என்னை அறியாம செஞ்சு கொண்டிருந்தன் ,

முதுகு பக்கம் , நெஞ்சு பக்கம் திரும்பவும் புல்லரிச்சுது , எவ்வளவு நேரம் தான் கையை முறுக்கிறது,

இனி தாங்காது, டோயிலட் போற வழில பிகருகளை கடக்கன்னால பாத்தன்,

என்னையே பாக்கிற மாதிரி இருந்திச்சு,

கதவை திறந்து கொமேட்டை பாத்தன் நல்லா கிளினா இருக்கு, டிசு இருக்கு, நம்மளுக்கு பழக்கமில்ல , ஷவரை எடுத்து தண்ணி வருதா எண்டு அடிச்சு பாத்தன், சரி இனி குந்த வேண்டியது தான் எண்டு நினைச்சு முடிக்கிறதுக்குள்ள,
வரும் போது அந்த பிகருகள் என்ன பாத்தது ஒரு மாதிரி இருந்திச்சு,

இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ள போகாட்டி நான் இருக்கிறது தெரிஞ்ச்சு போயிடும்.

நினைப்பு அந்த இடத்தை விட்டு என்னை கிளப்பீட்டுது,பைப்பை திறந்து கையை நனைச்சிட்டு திரும்பி போயிட்டன்.

கௌரவத்தை காபாதிட்டன்,

கொஞ்ச நேரத்துக்கு எனக்கு வரேல, அதுக்கு பிறகு திரும்பவும் ஜுராசிக் பார்க்..அது என்ன சத்தம் குர்ர் எண்டு..

சத்தம் வெளில வருதா எண்டு வைத்துக்கு கிட்ட காதை கொண்டு போய் செக் பண்ணினன், வரேல.

கொஞ்ச நேரத்தில திரும்பவும் உடம்பு சிளித்திச்சு, இப்ப தான் போயிட்டு வந்ததால உடன திரும்பவும் போகேலாது . சலரோக காரன் எண்டு நினைச்சிடுவாங்க, ஆனா என்ன செய்யிறது, இதுக்கு மேல முடியல , பாதி எழும்பீடன் ,

ஹாய் மிஸ்டர் மது,

அதே சூம்பி போன கத்தரிக்கா,

இந்த அவசரத்தில இந்த கொடுமை வேறையா,அஞ்சு நிமிஷம்...நகர முடியேல..நரக வேதனை,வெளிலையும் சொல்ல முடியாது,

உள்ளுக்குள்ள இவ்வளவு ரணகளம். முகத்தில எந்த சலனமும் காட்டாமை சிரிக்கோணும், நான் நடிகண்டா.

ஒரு கட்டத்தில பிச்சிக்கொண்டு வந்து லேசா பிரின்ச்சுது,நல்ல வேளை அது வாயு புத்திரன்,

கொஞ்ச நேரத்துக்கு ரிலிஸ். திரும்பி தொடங்காம இருக்கோணும்,

நான் முதல்லையே இருந்திருக்கலாம்,கௌரவம் தடுத்திட்டுது.

இந்த வறட்டு கௌரவம் இண்டைக்கு நேற்று வந்ததில்ல,

அஞ்சாம் ஆண்டு படிக்கேக்க எண்ட கிளாசில ஒரு பெடியன் அடக்க முடியல , காச்சட்டையோட போயிட்டான்,நாத்ததோட சேர்ந்து இந்த விஷயம் கிளாஸ் முழுக்க பரவீட்டுது.அண்டையில இருந்து அவனை எங்கட பெடியள் பாக்கிற விதமே வேற மாதிரி இருந்திச்சு , அவன் மட்டும் இல்லை , கிளாசில அவசர அவசரமா யாரும் எழும்பி டொயிலட்டுக்கு போனா அவன ஒரு மாதிரி பாப்பான்கள்,
சில நேரம் நக்கல் அடிப்பாங்கள்,
அவனுக்கு கௌரவ பிரச்சனை ஆயிடும்,

இந்த சம்பவம் எண்ட மனசில ஆழமா பதிஞ்சிட்டுது, இத்தனை வருஷம் கௌரவத்தை காப்பாத்திட்டு வாறன்,

ஆனா இண்டைக்கு.

அஞ்சு மணிக்கு அஞ்சு நிமிஷம், இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு , பொறுமையா இருந்திடுவமா .. வீட்ட போய் பாத்துக்கலாம் ,..

திரும்பவும் சிலிர்க்க தொடங்கீட்டுது.இப்ப உச்ச கட்டம், கையை இறுக்கி முறுக்கி கொண்டன்,

எக்ஸ் கியூ ஸ் மீ..

டாப்சி.. உதடு ..

கை லூசாச்சு..

ரெண்டாவது வார்த்தை ..

நம்ப முடியேல ,,

வார்த்தை வசனமாச்சு..

ஏதோ டவுட்டாம் கிளியர் பன்னோனுமாம்,

எனக்கு கொஞ்ச வேலை இருக்கு அவசரமா கிளம்பிரன் பிறகு கூபிடவா , அடிச்ச மாதிரி சொல்லீட்டன்..

அவள்ட முகத்தில ஏகப்பட்ட எக்ஸ்பிரசன்..

பாத்து ரசிச்சிருக்கலாம், ரசிகேல..

அவள நோண்டி ஆகிட்டான்.சபதம் நிரவேரிட்டு. இனி கூந்தலை முடிஞ்சுக்கலாம்.

வேணுமெண்டு செயேல, நிலைமை அப்பிடி,

காடாறு மடைய உடைக்க கொஞ்ச நேரம் தான்..

இனி முடியாது உச்ச கட்டம்..கிளம்பீட்டன்,வழில பிகருகளை பாகேலை..

கண் இருட்டிகொண்டு வந்திட்டுது ..

கதவை திறந்தன்,

வயிறு சர் பூர் ..

என்ன அவசரம் இன்னும் கொஞ்ச நேரம் தான் ..

கொமெட்டில குந்தினன்..

இரவு ரொட்டியும் மஸ்ரூம்.. காலமை டீ , கோர்ன் பிளாக்ஸ். மத்தியானம் சிக்கின் பிரைட் ரயிஸ்,

உடம்பெல்லாம் வேர்திட்டுது,
எதையோ சாதிச்சிட்ட மாதிரி ஒரு திருப்தி,இளமை திரும்பி வந்தது மாதிரி ஒரு சந்தோம்..

இதுகா இவ்வளவு காலமும் கௌரவம் பாத்திட்டு இருந்த.மத்தவன்கள் யோசிக்கிறத பற்றி நீ ஏன் கவலை படுறா.. அது அவங்க பிரச்சனை.உன் வாழ்க்கை உன்கையில்..
புத்தரும் ஜேசுவும் ஒரே போதனை தான்.அடி வயிறு கிளியர் ஆகிற வரைக்கும்..

மாட்டரை முடிச்சிட்டு வெளில வாறன் எல்லாரும் மூட்டையை கட்டீட்டு கிளம்பீடினம்,

அட.. இண்டைக்கு சனிக்கிழமை,அஞ்சு மணிக்கு ஆப் எல்லா,

கொஞ்ச நேரம் பொறுமையா இருந்திருந்தா வீட்டை போய் முடிச்சிருக்கலாமே,

இல்லை..

எனக்குள்ள இப்ப ஒரு தைரியம்,இனி வாந்தி யாவது பேதியாவது, படுவா வாடா ... பாத்துகலாம்,

வறட்டு கௌரவம் துலன்ச்சு போச்சு.

எண்டாலும் யாராவது நக்கலா பாகினமா எண்டு சுத்தி முத்தி பாத்தன்,

உலகமே எங்கள பாத்திட்டு இருக்கிரமாதிரி நாம தான் நினைச்சிட்டு இருக்கிறம்,அவன் அவனுக்கு சொந்த பிரச்னையை பாக்கவே டயும் சரி,இதுக்குள்ள எங்க நம்மள பாகிறது, எனக்குள்ள திரும்பவும் போதனை,

பட் நூடில்ஸ் மண்டையன் என்னை கவனிச்சிட்டான்,

லேசா சிரிச்சுக்கொண்டே நான் காலமை கேட்ட பாணில கேட்டான்,

மிஸ்டர் மது எனி புராபிலம்,

இப்ப விளங்கிச்சு அவன்ட பத்து மணி பிரச்சனை,

ஏதோ ஞானம் கிடைச்சு தெளிந்ச்சவன் மாதிரி அசடு வழிய தையிரியமா சொன்னன்....

போர் பென் யாங்..

12 comments:

  1. Gud one as usual..) ur story telling skill s simply better, keep on writing..)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரகு..ஆதரவு தொடரட்டும்

      Delete
  2. ‎"ஒபிசில எண்ட ரூம் சேரன் படம் மாதிரி எப்பவும் அமைதியா தான் இருக்கும். நானும் அவளும் மட்டும் தான். ஆனா பக்கத்தில ராஜேஷ் படம், கத்தரிக்காயை மூணு நாள் பிரீசருக்குள்ள வச்சு எடுத்த மாதிரி சூம்பி போயிருக்கும் அவன்ட முன்சி" சூப்பர் மச்சி :)

    இண்டர்வல்க்கு மேல கமல் படம் மாதிரி இருந்துச்சு.

    கொஞ்சம் காப் விட்டு போடு மச்சான். எடுத்த உடனேயே 300 லைன்ல ஒரு பரக்ராப்.

    பல மட்டங்களை சென்று சேர்வதால் ( நாளைக்கே ஒரு ஜெயமோகன், ராதாகிருஷ்ணன் மாதிரி பெரிய ஆளா மாறிட்டா, வரலாறு, முந்தய பதிவுகளை பார்வையிடும்) சில கீழ் மட்ட வார்த்தைகளை தவிர்த்து இருக்கலாம்.

    ஓவரால் எழுத்துக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நரேன்.. காப் மாட்டேர் முயன்றும் முடியாம போய்ட்டுது, அடுத்த பதிவில திருத்திக்கிரன், நாங்க வழமையா பாவிக்கிற வார்த்தைகள் தானே அதெல்லாம். கதைக்கு தேவப்பட்டிச்சு .. ஆனாலும் ஜெயமோகன் , ராதா கிருஷ்ணன் மாட்டர் கொஞ்சம் ஓவர் பில்ட் அப்.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  3. // இப்ப உச்ச கட்டம் , கையை இறுக்கி முறுக்கி கொண்டன் , எக்ஸ் கியூ ஸ் மீ .. டாப்சி.. உதடு .. கை லூசாச்சு .. ரெண்டாவது வார்த்தை .. நம்ப முடியேல ,, வார்த்தை வசனமாச்சு .. ஏதோ டவுட்டாம் கிளியர் பன்னோனுமாம், எனக்கு கொஞ்ச வேலை இருக்கு அவசரமா கிளம்பிரன் பிறகு கூபிடவா , அடிச்ச மாதிரி சொல்லீட்டன்.. அவள்ட முகத்தில ஏகப்பட்ட எக்ஸ்பிரசன் .. பாத்து ரசிச்சிருக்கலாம், ரசிகேல .. அவள நோண்டி ஆகிட்டான் . சபதம் நிரவேரிட்டு இனி கூந்தலை முடிஞ்சுக்கலாம். வேணுமெண்டு செயேல, நிலைமை அப்பிடி , காடாறு மடைய உடைக்க கொஞ்ச நேரம் தான் .. இனி முடியாது உச்ச கட்டம் .. /

    ஹிஹி எங்க எல்லாம் போயி காட்டாற்றை திறக்க வேண்டிய சூழ்நிலை :ப


    பதிவு செம மாஸ் மொக்கையில :P!
    அடுத்த தடவை பதிவிடும்போது இடைவெளிகள்,எழுத்துப்பிழைகளை சரி செய்து வெளியிட்டால் வாசிக்கவும் இலகு,பார்க்கவும் அழகாய் இருக்கும் பாஸ்.பார்க்க அழகா இருந்தால் தான் வாசிக்க தொடங்குவார்கள் :)

    அடிக்கடி எழுதுங்கோ!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மைந்தன்..நானும் அழகா எழுதி தான்யா போட்டன்.. என்ன கோதாரியோ தெரியேல இப்பிடி வந்து நிக்குது.. சித்திரமும் கை பழக்கம் தானே, அடுத்ததில பாத்துக்குவம்.

      அடிக்கடி நல்ல மாட்டார் அம்பிட்டுச்செண்டா எழுதுறன்.

      Delete
  4. அப்புறம் கமென்ட் மொடேறேசனை எடுத்து விடுங்கோ செட்டிங்க்ஸ் போயி..
    எடுத்தால் கருத்திட இலகு :)

    ReplyDelete
  5. எடுத்துட்டேன்... தொடர்ந்தும் உங்கள் ஆதரவு இருக்கட்டும்..

    ReplyDelete
  6. பலர் அடக்கி வைத்திருந்த விஷயத்தை, அழகாக நாறடிசிருக்கிராய். சொல்லும் பாணி அசத்தல்! (Machchan, try to write some scripts). கீழ்த்தரமான வார்த்தைகள் அநாவசியம்; என்னதான் நாம அப்படி கதைத்தாலும் வாசிக்கும் பொது கொஞ்சம் அருவருப்பு. மிகமுக்கியமானது , கதையின் பின்னணி. எனக்கு புரிஞ்சாலும், உன்னை பத்தி தெரியாத ஒருவர் வாசிக்கும் போது கொஞ்சம் போரடிக்கும். " ' ; . எதையுமே காணல. Overall, a superb thought expressed in a creative way. Make me read more of yours, in the future..:)

    ReplyDelete
    Replies
    1. நன்றிடா ,அருமையான விமர்சனம்.எனக்கு அத்தியாவசியமும் கூட. அனுபவமா இல்லாம நானும் இத கதையா பாத்ததாலோ என்னவோ கதையின் பின்னனிய பற்றி சிந்திக்கவில்லை.வாசிப்பவர்கள் இளைஞர்கள் எண்டுறதால வார்த்தைய பற்றி அதிகம் யோசிக்கவில்லை..ஆதரவு தொடரட்டும்

      Delete