Saturday, November 10, 2012

இந்த கதைக்கு பேர் வைக்கேலை.


கை ரெண்டும் முன்னுக்கிருந்த கம்பில இறுக்கி பிடிச்சுக்கொண்டு வாய் ஏதோ முனுமுனுக்க. நெத்தி சுருங்கி கண்ரெண்டும் இறுக்கி மூடினபடி.அவள்.

ஒரு கையாள குழந்தைட தலைய மடியோட சேர்த்து பொத்தின படி ஒரு லேடி.
எல்லாருண்ட கண்ணிலையும் மரண பீதி.

பெரிசுங்க எல்லாம் வாயில தூசணங்களை முனுமுனுத்த படி.சவுண்டு வெளில வரேல . இருந்த சவுண்டு பாட்டீங்களெல்லாம் கண்டேக்டரையும் ரைவரையும் ஏசி பாத்தாச்சு. என்ன பிரயோசனம்.

பக்கத்து வீட்டு குமார் அண்ணைட நாய் தான் பெலமா குறைக்கும் எண்டு நினைச்சுக்கொண்டிருந்தன். இந்த கண்டக்டரை பாக்க முதல்ல.

பாட்சா படத்தில ரஜனியோட சுத்திர பீம் பாயிஸ் மாதிரி நல்லா திண்டு உடம்பை வளத்து வச்சிருக்கு.எருமை மாடு.சுத்த காட்டான்.

இந்தமாதிரி காட்டான்களை பாக்கும் போது யாரும் இவன் கை காலை இறுக்கி பிடிச்சிருக்க நான் போயி ஓங்கி மூன்ச்சீல நொங்கு நொங்கெண்டு நொங்கீட்டு ஓடி போய்டணும் எண்டு தோணும்.சான்சே கிடைக்கேல.

நான் காசுகுடுத்து பத்து நிமிஷம்தான் ஆவுது.பத்து தரம் கேட்டுட்டான். "மல்லி டிக்கெட் எடுத்தியா".என்னை மட்டுமில்ல. ஒரு ரோட்டேசன்ன்ல எல்லாரையும்.

முந்தி பஸ்காசு பதினெட்டுரூபா. 20/- குடுத்தா 2/-தர்மகணக்கு.

கடைசி ஸ்ட்ரையிக்குக்கு பிறகு 23/-, 30/- குடுத்தன். சில்லறை சேர்ந்த உடனை தாரன் எண்டான்.

இன்னும் சேரேலியா,கேக்கேலை.

மறக்காம வாங்கோணும். நான் மறப்பன் எண்டுறது அவன்ட எதிர்பார்ப்பா இருக்கலாம்.
இந்த ரூட் பஸ் எப்பவாவது இருந்திட்டு தான் இவ்வளவு ஸ்பீடா போகும்.வேற கம்பனி பஸ் ஓரே நேரத்தில விட்டா இந்த பிரச்சனை. மத்தவங்களுக்கு..மரண பீதி..

நான் ஜாலியா ரோலர் கோஸ்டரில போற மாதிரி என்ஜாய் பண்ணுவன். பழகீரிச்சு.

ஒவ்வொரு ஜன்க்ஷனையும் யாரு முதல்ல பிடிக்கிறது.இதுதான் போட்டி.

ஜன்க்சன்ல நிறைய கூட்டம் ஏறும். ஒவ்வொரு ஜன்க்சனுக்கும் இடையில 4 ஹோல்ட்.இந்த காப்பில தான் போட்டி. திரில்லிங்கா இருக்கும்.

வழமையாவே போட்டி பஸ் முந்திரிச்சுன்னா ஜன்க்சனுக்கு முதல் ஹோல்டில பஸ்ஸை நிப்பாட்டிட்டு அடுத்த போட்டி பஸ்சுக்கு வெயிட் பண்ணுவாங்கள்.அந்த காப்பில ஜன்க்சநில கூட்டம் சேரும். இந்த ஹோல்டிளையும் கூட்டத்தை ஏத்தலாம்.

அதுவரைக்கும் டிரைவர் வெத்தில போட்டு ரோட்டில துப்புவாறு.கண்டேக்தர் ஹோல்ட் கடையில பிளேன் டி குடிப்பாரு.நாம!!!

இது பழக்கமில்லாதவங்க டிரைவரோட சினக்கலாம். இதுக்கு ரோலர்கோஸ்டர் தேவல என்னு புறுபுருக்கலாம்.

பழகினவங்க, தூங்கலாம், படுக்கலாம், உறங்கலாம்.

வேணுமுன்னா இயர் போனை காதில போட்டு இசையில லயிக்கலாம்.

அவள் அப்பிடித்தான்.

பின்வாசல் புறமா சோத்தாங்கை பக்க சீட்டில நான். பீச்சாங்கை பக்க சீட்டில அவள். காதில இயர்போன். மடியில பாதி படிச்சு முடிச்ச இங்கிலீஸ் கதை புத்தகம். பாதி அழிந்ச்ச கியுடேக்ஸ் நகங்களால புத்தக அட்டையில ரிதம். கண்ண மூடி.உதடு லேசா அசைய.

சின்மயி(இல்லை என்னக்கேன் வம்பு)ஸ்ட்ரேயா கோஷல் காதுக்குள்ள கிறங்கிக்கொண்டிருக்க வேணும்.

இயர் போன்,ஒரு பக்கம் உண்ட காதில மட்ட பக்கம் எண்ட காதில உன் தலை என் தோளில என் கன்னமோ உன் தலையில சாய, "நாக்கு மூக்கா" பாட்டுக்கு கூட இந்த மெலடித்தாளம் நம்ம விரல்சேர்த்து போடலாமே.கேப்பமா.கேக்கேல.

பாத்த உடனேயே ஊத்தின பீர் மாதிரி போங்கீட்டு வந்திட்டுது காதல்.
அயிஸ் கட்டி போட்ட மாதிரி பாதில அடன்கீட்டுது எண்ட அடுத்த பார்வையில.

அவள் சிலீவ் லேஸ் டி சேர்ட்.

எனக்கு சிலீவ் லேஸ் டி சேர்ட் போட்ட பொண்ணுங்க மேல லவ் வந்ததே கிடையாது.ஏனெண்டு காரணம் தெரியாது. ஆனா பிடிக்காது.

சயிட்டு வாக்கில "வீட்" அட்டுக்கு வார கத்தரீனா கயிப் மாதிரி இருக்காளே. "பூவெல்லாம் கேட்டுப்பார்" பட ஜோதிகா மாதிரி இருந்தாலும் சிலீவ் லேஸ் போட்டா பிடிக்காது அவ்வளவுதான்.

* * * * *****************************************************************************

மழைஜெண்டா மங்களா ஹோல்ட் கூட தங்கர் பச்சான் பட பெர்ஸ்ட்டு ஷோ மாதிரி. பசங்களையே காணக்கிடைக்காது. வெறிச்சோடி கிடக்கும்.

அடை மழை. குடையோட ரோட்டில பஸ்சுக்காக நான். தனியா.
ரோட்டில போற ஒன்னு ரெண்டு பேரும் காலை அகட்டி விண்வெளில நடக்கிறவங்க மாதிரி.

"மௌனம் பேசியதே" கிளைமாக்ஸ்ல சூரியாக்கு தோணின மாதிரி யாரோ என்ன போலோ பண்ணிற மாதிரி இருந்திச்சு. திரும்பினன்.

யெஸ் பொண்ணுதான்.

லயிலாவா. இல்லை ஜோதிகா.குண்டா மொழு மொழுன்னு ச்சபியா,"பூவெல்லாம் கேட்டுப்பார்" ஜோதிகாவேதான்.

எக்ஸ்கியுஸ்மி.
மடிச்ச வெள்ளை பேப்பர் நீட்டினாள்.

லவ் லெட்டரா. மனசு எதிர் பார்த்திச்சு,

இல்லை. ஏதோ நம்பர்.

சாரிங்க நான் லோட்டேரி டிக்கெட் விக்கிறவன் இல்லிங்க. அந்த தெருவோர கடையில கேட்டீங்கன்னா..

இல்லை இது எண்ட போன் நம்பர், இன்னிக்கு ராத்திரி இதில இருந்து கோல் பண்றன்,

என் நம்பர்.

தெரியும்.

அப்புறம் என்ன லவ்வுதான்.

அவள்ட உதட்டோர சிரிப்பில காதல் பொங்கிக்கொண்டு வந்..இல்லை வரேலை. வராது.சத்தியமா வராது.

இப்பதான் கவனிச்சன்.அவள் சிலீவ் லேஸ் டிசேர்ட். சிலீவ் லேஸ் ஜோதிகா. காதல் வராது.



********************************************************************************

கண்ரெண்டும் அடுத்த பிகரை தேடி நகர தொடங்கீட்டுது. பஸ் நாலாவது ஹோல்டை விட்டு நகரவே இல்லை.

இயர் போனிண்ட ஒரு பக்கம் அவள் காதில மற்ற பக்கம் அவன் காதில. அவள் தலை அவன் தோளில. அவன் கன்னமோ அவள் தலையில சாய. முன்னுக்கிருந்து ரெண்டாவது சீட்டில இவங்க.

இவளும் போனி டெயில்.டீசேர்ட் தான். சிலீவ் லேஸ் இல்லை.

திரும்பி பாக்க மாட்டாளா. அவள் முகத்தை எப்பிடியாவது பாத்திடனும்.

என் கண் நகரவேயில்ல. பஸ் நகர தொடன்கீச்சு.

இவ்வளவு நேரம் நின்னும் எவனும் ஏறாத அந்த பஸ்ஸில ஒரு சொட்டை ஏறிச்சு. அரை வயிறு வரைக்கும் உயர்த்தி விட்ட டவுசர். புள் சிலீவ் சேர்ட். நிச்சயமா நொப்பிசன் இல்லை.

சொட்டை விழுந்த மேயர் சுந்தர்ராஜன் மாதிரி இருந்திச்சு.அந்தாளை எழும்பி ஸ்டாண்டிங் ஓவசன் குடுத்து வரவேட்பமா. எழும்பேளை.

மல்லி டிக்கெட்... மறுபடியும் காட்டெருமை.

எண்ட மீதி சல்லி...

போய்ட்டான்.


ஒரு சீட்டும் பிரீ இல்லை. மேயர் பின் வாசலோரமா கம்பிய பிடிச்சிட்டு நின்னிட்டிருந்தாறு.
அவள பாக்கோணும் மனசு தவிச்சிச்சு. டிரைவரிண்ட கண்ணாடில முகம் தெரியுதா. தெரியேல. எழும்பி போய் பாத்திடுவமா. எழும்பேளை.

அடுத்த ஹோல்ட் ஜன்க்சன். கூட்டம் ஏறும். சீட் போய்டும். கிடைக்காது. பேப்பர் ரொக்கட் செஞ்சு விடுவமா. விடேல.
அவளா திரும்பி பாக்கிற வரைக்கும் காத்திருக்க வேண்டியது தான்.

காத்திருக்கிறதும் காதல்ல சுகம் தானே.

*************************************************************************************


கடைசியா சொல்லுங்க.நான் உங்களை சின்சியரா லவ் பண்றன். என்ன சொல்றீங்க பிலீஸ்..

அடியே ஊரில பொண்ணுங்ககிட்ட கேட்டு பாரு நான் ஒரு அட்டுபையன்டீ.

தெரியும்.

கொய்யால.

பரவாயில்ல பிடிச்சிருக்கு.

எனக்கு பிடிகேலையே.

ஓக்கே சொல்லலன்னா கைய வெட்டிக்க போறன்.

ஏதோ கத்தரிக்கா வெட்ட போற மாதிரி சொல்றா. எனக்கு பிடிக்கேல

ஏன்.

ரீசன். யோசிச்சன் சொல்லேல. நீ சிலீவ் லேஸ் டி சேர்ட்.
சொல்லியிருந்தா மாறுரன் என்டிருப்பாள், ஆனா நான் போக்கிரி, ஒரு தடவை முடிவு பண்ணினா என் பேச்சை நானே கேக்க மாட்டன்.

ஒரு மாசம் தொடர்ந்தீச்சு. அவ்வளவுதான். அப்புறம் ஏனோ இல்லை தொல்லை.

**************************************************************************************


இருந்த கடுப்புக்குள்ள காட்டெருமை. மல்லி டிக்கெட். இந்த முறை அவனை பாத்திட்டே இருந்தன்.புரின்ச்சுது.போய்ட்டான்.

அடுத்த முறை வரட்டும். காசு தராட்டி இன்னிக்கு ரத்தம் பாக்காம போ மாட்டன் நானு. எவ்வளவு காலம் ஏமாறுறது.

போனில ரிமயிண்டர் போட்டன். 7/-

அடிக்கடி காதோரமா விரலால முடிய கோதி விடும் போது பாதி கன்னம்.ஏன் பாதி கண் கூட தெரிஞ்சுச்சு.காதுக்கு கீழை கழுத்தோரமா பொன்னிற முடி. அழகுடி..

திரும்பி பாரு.

பேசாம கொக்கரக்கோ எண்டு கூவீட்டு கம்முன்னு இருப்பமா திரும்புவாள். கத்தேல.

காட்டெருமை திடீரெண்டு குறைக்க தொடங்கீட்டுது.

திரும்புராளா. திரும்பேலை. .

இப்ப மேஜரோட.. என்ன பிரச்சனை எண்டு கவனிக்கேலை கவனமெல்லாம் அவள் திரும்பிரதிலை.

முகம் தெரியாத காதல் இனம் புரியாத சுகம்.

தகராறு முத்தீட்டுது.காடேருமை கை நீட்ட.மேஜரோட முதல் குத்து அவன் மூஞ்சேல. என் சீட்டுக்கு பக்கத்தில வந்து விழுந்தான்..அவள் திரும்பேலை,

அவன் எந்திரிக்க முதல் அடுத்த குத்து. அதுக்கு பிறகு அடுத்த குத்து.

தடுமாரீட்டான் காட்டெருமை.

தைரியம் எண்டுறது பாடில இல்லை . மனசில இருக்கு.

"பரதேசிகளே உங்களுக்கெல்லாம் ஸ்ட்ரைக்கா கேக்குது ஸ்ட்ரையுக்கு"
அவரிட கடைசி குத்து கொஞ்சம் பலமா.

அது சாதாரண குத்தா அவனுக்கு படேலை. எனக்கும் தான்.

பஸ் காசை உயர்த்த சொல்லி அடிக்கடி ஸ்ட்ரஜிக்கு பண்ணி பஸ்ஸை நம்பி வேலைக்கு போய் வார ரேசிங் கார் வாங்க காசு இல்லாத ஆயிரக்கணக்கான மிடில் கிளாஸ் கொமன்மான்களிண்ட ஒட்டு மொத்த குத்து.. உள்குத்து.

எல்லாரும் திகைச்சிட்டாங்க. எழும்பீட்டாங்க.அவளும் தான்.திரும்பினாள்.

இவள்.. இவள்...

சிலீவ் லேஸ் ஜோதிகா!!!

முகத்தில லேசா கலவரம்.தகராறை பாத்தில்ல.என்னைய பாத்து.சட்டெண்டு திரும்பீட்டாள்.

எனக்குள்ள சிரிப்பு.

காட்டெருமை எழும்பி திருப்பி அடிக்க முதல் கூட்டம் இழுத்திட்டு போய்ட்டுது.பஸ் நிண்டிச்சு. என் ரிமயிண்டர் அடிச்சிச்சு. முன்னுக்கு போனன்.

அவள பாக்க இல்லை அவளில இப்ப காதல் இல்லை.

கூட்டத்தை விலக்கி கொண்டு பாத்தன். அவன்ட கையை இறுக்கி பிடிச்சுக்கொண்டு சமாதானம்.

இது தான் சந்தர்ப்பம். ஓங்கி நாமளும் அவன் மூன்ச்சில நோங்கு நோன்குன்னு நோங்க்கீட்டு ஓடி போய்டுவமா.நொங்கேலை.அவனை தட்டி கேட்டன்.

என் மீதி சல்லி 7/-.

நிமிந்து பாத்தான். கடுப்பிண்ட உச்ச கட்டம்.

கூட்டத்தை பாத்தான்.கூட்டம் என்னை. நான் அவனை.

வாயோரமா ரத்தம் பாத்தன்.

டவுசர் பொக்கேட்டுக்குள்ள ஒளிச்சு வச்சிருந்த சில்லறையில எடுத்து தந்தான் . எனக்குள்ள சிரிப்பு.

"சில நேரங்களில அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டாங்க"