Saturday, November 10, 2012

இந்த கதைக்கு பேர் வைக்கேலை.


கை ரெண்டும் முன்னுக்கிருந்த கம்பில இறுக்கி பிடிச்சுக்கொண்டு வாய் ஏதோ முனுமுனுக்க. நெத்தி சுருங்கி கண்ரெண்டும் இறுக்கி மூடினபடி.அவள்.

ஒரு கையாள குழந்தைட தலைய மடியோட சேர்த்து பொத்தின படி ஒரு லேடி.
எல்லாருண்ட கண்ணிலையும் மரண பீதி.

பெரிசுங்க எல்லாம் வாயில தூசணங்களை முனுமுனுத்த படி.சவுண்டு வெளில வரேல . இருந்த சவுண்டு பாட்டீங்களெல்லாம் கண்டேக்டரையும் ரைவரையும் ஏசி பாத்தாச்சு. என்ன பிரயோசனம்.

பக்கத்து வீட்டு குமார் அண்ணைட நாய் தான் பெலமா குறைக்கும் எண்டு நினைச்சுக்கொண்டிருந்தன். இந்த கண்டக்டரை பாக்க முதல்ல.

பாட்சா படத்தில ரஜனியோட சுத்திர பீம் பாயிஸ் மாதிரி நல்லா திண்டு உடம்பை வளத்து வச்சிருக்கு.எருமை மாடு.சுத்த காட்டான்.

இந்தமாதிரி காட்டான்களை பாக்கும் போது யாரும் இவன் கை காலை இறுக்கி பிடிச்சிருக்க நான் போயி ஓங்கி மூன்ச்சீல நொங்கு நொங்கெண்டு நொங்கீட்டு ஓடி போய்டணும் எண்டு தோணும்.சான்சே கிடைக்கேல.

நான் காசுகுடுத்து பத்து நிமிஷம்தான் ஆவுது.பத்து தரம் கேட்டுட்டான். "மல்லி டிக்கெட் எடுத்தியா".என்னை மட்டுமில்ல. ஒரு ரோட்டேசன்ன்ல எல்லாரையும்.

முந்தி பஸ்காசு பதினெட்டுரூபா. 20/- குடுத்தா 2/-தர்மகணக்கு.

கடைசி ஸ்ட்ரையிக்குக்கு பிறகு 23/-, 30/- குடுத்தன். சில்லறை சேர்ந்த உடனை தாரன் எண்டான்.

இன்னும் சேரேலியா,கேக்கேலை.

மறக்காம வாங்கோணும். நான் மறப்பன் எண்டுறது அவன்ட எதிர்பார்ப்பா இருக்கலாம்.
இந்த ரூட் பஸ் எப்பவாவது இருந்திட்டு தான் இவ்வளவு ஸ்பீடா போகும்.வேற கம்பனி பஸ் ஓரே நேரத்தில விட்டா இந்த பிரச்சனை. மத்தவங்களுக்கு..மரண பீதி..

நான் ஜாலியா ரோலர் கோஸ்டரில போற மாதிரி என்ஜாய் பண்ணுவன். பழகீரிச்சு.

ஒவ்வொரு ஜன்க்ஷனையும் யாரு முதல்ல பிடிக்கிறது.இதுதான் போட்டி.

ஜன்க்சன்ல நிறைய கூட்டம் ஏறும். ஒவ்வொரு ஜன்க்சனுக்கும் இடையில 4 ஹோல்ட்.இந்த காப்பில தான் போட்டி. திரில்லிங்கா இருக்கும்.

வழமையாவே போட்டி பஸ் முந்திரிச்சுன்னா ஜன்க்சனுக்கு முதல் ஹோல்டில பஸ்ஸை நிப்பாட்டிட்டு அடுத்த போட்டி பஸ்சுக்கு வெயிட் பண்ணுவாங்கள்.அந்த காப்பில ஜன்க்சநில கூட்டம் சேரும். இந்த ஹோல்டிளையும் கூட்டத்தை ஏத்தலாம்.

அதுவரைக்கும் டிரைவர் வெத்தில போட்டு ரோட்டில துப்புவாறு.கண்டேக்தர் ஹோல்ட் கடையில பிளேன் டி குடிப்பாரு.நாம!!!

இது பழக்கமில்லாதவங்க டிரைவரோட சினக்கலாம். இதுக்கு ரோலர்கோஸ்டர் தேவல என்னு புறுபுருக்கலாம்.

பழகினவங்க, தூங்கலாம், படுக்கலாம், உறங்கலாம்.

வேணுமுன்னா இயர் போனை காதில போட்டு இசையில லயிக்கலாம்.

அவள் அப்பிடித்தான்.

பின்வாசல் புறமா சோத்தாங்கை பக்க சீட்டில நான். பீச்சாங்கை பக்க சீட்டில அவள். காதில இயர்போன். மடியில பாதி படிச்சு முடிச்ச இங்கிலீஸ் கதை புத்தகம். பாதி அழிந்ச்ச கியுடேக்ஸ் நகங்களால புத்தக அட்டையில ரிதம். கண்ண மூடி.உதடு லேசா அசைய.

சின்மயி(இல்லை என்னக்கேன் வம்பு)ஸ்ட்ரேயா கோஷல் காதுக்குள்ள கிறங்கிக்கொண்டிருக்க வேணும்.

இயர் போன்,ஒரு பக்கம் உண்ட காதில மட்ட பக்கம் எண்ட காதில உன் தலை என் தோளில என் கன்னமோ உன் தலையில சாய, "நாக்கு மூக்கா" பாட்டுக்கு கூட இந்த மெலடித்தாளம் நம்ம விரல்சேர்த்து போடலாமே.கேப்பமா.கேக்கேல.

பாத்த உடனேயே ஊத்தின பீர் மாதிரி போங்கீட்டு வந்திட்டுது காதல்.
அயிஸ் கட்டி போட்ட மாதிரி பாதில அடன்கீட்டுது எண்ட அடுத்த பார்வையில.

அவள் சிலீவ் லேஸ் டி சேர்ட்.

எனக்கு சிலீவ் லேஸ் டி சேர்ட் போட்ட பொண்ணுங்க மேல லவ் வந்ததே கிடையாது.ஏனெண்டு காரணம் தெரியாது. ஆனா பிடிக்காது.

சயிட்டு வாக்கில "வீட்" அட்டுக்கு வார கத்தரீனா கயிப் மாதிரி இருக்காளே. "பூவெல்லாம் கேட்டுப்பார்" பட ஜோதிகா மாதிரி இருந்தாலும் சிலீவ் லேஸ் போட்டா பிடிக்காது அவ்வளவுதான்.

* * * * *****************************************************************************

மழைஜெண்டா மங்களா ஹோல்ட் கூட தங்கர் பச்சான் பட பெர்ஸ்ட்டு ஷோ மாதிரி. பசங்களையே காணக்கிடைக்காது. வெறிச்சோடி கிடக்கும்.

அடை மழை. குடையோட ரோட்டில பஸ்சுக்காக நான். தனியா.
ரோட்டில போற ஒன்னு ரெண்டு பேரும் காலை அகட்டி விண்வெளில நடக்கிறவங்க மாதிரி.

"மௌனம் பேசியதே" கிளைமாக்ஸ்ல சூரியாக்கு தோணின மாதிரி யாரோ என்ன போலோ பண்ணிற மாதிரி இருந்திச்சு. திரும்பினன்.

யெஸ் பொண்ணுதான்.

லயிலாவா. இல்லை ஜோதிகா.குண்டா மொழு மொழுன்னு ச்சபியா,"பூவெல்லாம் கேட்டுப்பார்" ஜோதிகாவேதான்.

எக்ஸ்கியுஸ்மி.
மடிச்ச வெள்ளை பேப்பர் நீட்டினாள்.

லவ் லெட்டரா. மனசு எதிர் பார்த்திச்சு,

இல்லை. ஏதோ நம்பர்.

சாரிங்க நான் லோட்டேரி டிக்கெட் விக்கிறவன் இல்லிங்க. அந்த தெருவோர கடையில கேட்டீங்கன்னா..

இல்லை இது எண்ட போன் நம்பர், இன்னிக்கு ராத்திரி இதில இருந்து கோல் பண்றன்,

என் நம்பர்.

தெரியும்.

அப்புறம் என்ன லவ்வுதான்.

அவள்ட உதட்டோர சிரிப்பில காதல் பொங்கிக்கொண்டு வந்..இல்லை வரேலை. வராது.சத்தியமா வராது.

இப்பதான் கவனிச்சன்.அவள் சிலீவ் லேஸ் டிசேர்ட். சிலீவ் லேஸ் ஜோதிகா. காதல் வராது.



********************************************************************************

கண்ரெண்டும் அடுத்த பிகரை தேடி நகர தொடங்கீட்டுது. பஸ் நாலாவது ஹோல்டை விட்டு நகரவே இல்லை.

இயர் போனிண்ட ஒரு பக்கம் அவள் காதில மற்ற பக்கம் அவன் காதில. அவள் தலை அவன் தோளில. அவன் கன்னமோ அவள் தலையில சாய. முன்னுக்கிருந்து ரெண்டாவது சீட்டில இவங்க.

இவளும் போனி டெயில்.டீசேர்ட் தான். சிலீவ் லேஸ் இல்லை.

திரும்பி பாக்க மாட்டாளா. அவள் முகத்தை எப்பிடியாவது பாத்திடனும்.

என் கண் நகரவேயில்ல. பஸ் நகர தொடன்கீச்சு.

இவ்வளவு நேரம் நின்னும் எவனும் ஏறாத அந்த பஸ்ஸில ஒரு சொட்டை ஏறிச்சு. அரை வயிறு வரைக்கும் உயர்த்தி விட்ட டவுசர். புள் சிலீவ் சேர்ட். நிச்சயமா நொப்பிசன் இல்லை.

சொட்டை விழுந்த மேயர் சுந்தர்ராஜன் மாதிரி இருந்திச்சு.அந்தாளை எழும்பி ஸ்டாண்டிங் ஓவசன் குடுத்து வரவேட்பமா. எழும்பேளை.

மல்லி டிக்கெட்... மறுபடியும் காட்டெருமை.

எண்ட மீதி சல்லி...

போய்ட்டான்.


ஒரு சீட்டும் பிரீ இல்லை. மேயர் பின் வாசலோரமா கம்பிய பிடிச்சிட்டு நின்னிட்டிருந்தாறு.
அவள பாக்கோணும் மனசு தவிச்சிச்சு. டிரைவரிண்ட கண்ணாடில முகம் தெரியுதா. தெரியேல. எழும்பி போய் பாத்திடுவமா. எழும்பேளை.

அடுத்த ஹோல்ட் ஜன்க்சன். கூட்டம் ஏறும். சீட் போய்டும். கிடைக்காது. பேப்பர் ரொக்கட் செஞ்சு விடுவமா. விடேல.
அவளா திரும்பி பாக்கிற வரைக்கும் காத்திருக்க வேண்டியது தான்.

காத்திருக்கிறதும் காதல்ல சுகம் தானே.

*************************************************************************************


கடைசியா சொல்லுங்க.நான் உங்களை சின்சியரா லவ் பண்றன். என்ன சொல்றீங்க பிலீஸ்..

அடியே ஊரில பொண்ணுங்ககிட்ட கேட்டு பாரு நான் ஒரு அட்டுபையன்டீ.

தெரியும்.

கொய்யால.

பரவாயில்ல பிடிச்சிருக்கு.

எனக்கு பிடிகேலையே.

ஓக்கே சொல்லலன்னா கைய வெட்டிக்க போறன்.

ஏதோ கத்தரிக்கா வெட்ட போற மாதிரி சொல்றா. எனக்கு பிடிக்கேல

ஏன்.

ரீசன். யோசிச்சன் சொல்லேல. நீ சிலீவ் லேஸ் டி சேர்ட்.
சொல்லியிருந்தா மாறுரன் என்டிருப்பாள், ஆனா நான் போக்கிரி, ஒரு தடவை முடிவு பண்ணினா என் பேச்சை நானே கேக்க மாட்டன்.

ஒரு மாசம் தொடர்ந்தீச்சு. அவ்வளவுதான். அப்புறம் ஏனோ இல்லை தொல்லை.

**************************************************************************************


இருந்த கடுப்புக்குள்ள காட்டெருமை. மல்லி டிக்கெட். இந்த முறை அவனை பாத்திட்டே இருந்தன்.புரின்ச்சுது.போய்ட்டான்.

அடுத்த முறை வரட்டும். காசு தராட்டி இன்னிக்கு ரத்தம் பாக்காம போ மாட்டன் நானு. எவ்வளவு காலம் ஏமாறுறது.

போனில ரிமயிண்டர் போட்டன். 7/-

அடிக்கடி காதோரமா விரலால முடிய கோதி விடும் போது பாதி கன்னம்.ஏன் பாதி கண் கூட தெரிஞ்சுச்சு.காதுக்கு கீழை கழுத்தோரமா பொன்னிற முடி. அழகுடி..

திரும்பி பாரு.

பேசாம கொக்கரக்கோ எண்டு கூவீட்டு கம்முன்னு இருப்பமா திரும்புவாள். கத்தேல.

காட்டெருமை திடீரெண்டு குறைக்க தொடங்கீட்டுது.

திரும்புராளா. திரும்பேலை. .

இப்ப மேஜரோட.. என்ன பிரச்சனை எண்டு கவனிக்கேலை கவனமெல்லாம் அவள் திரும்பிரதிலை.

முகம் தெரியாத காதல் இனம் புரியாத சுகம்.

தகராறு முத்தீட்டுது.காடேருமை கை நீட்ட.மேஜரோட முதல் குத்து அவன் மூஞ்சேல. என் சீட்டுக்கு பக்கத்தில வந்து விழுந்தான்..அவள் திரும்பேலை,

அவன் எந்திரிக்க முதல் அடுத்த குத்து. அதுக்கு பிறகு அடுத்த குத்து.

தடுமாரீட்டான் காட்டெருமை.

தைரியம் எண்டுறது பாடில இல்லை . மனசில இருக்கு.

"பரதேசிகளே உங்களுக்கெல்லாம் ஸ்ட்ரைக்கா கேக்குது ஸ்ட்ரையுக்கு"
அவரிட கடைசி குத்து கொஞ்சம் பலமா.

அது சாதாரண குத்தா அவனுக்கு படேலை. எனக்கும் தான்.

பஸ் காசை உயர்த்த சொல்லி அடிக்கடி ஸ்ட்ரஜிக்கு பண்ணி பஸ்ஸை நம்பி வேலைக்கு போய் வார ரேசிங் கார் வாங்க காசு இல்லாத ஆயிரக்கணக்கான மிடில் கிளாஸ் கொமன்மான்களிண்ட ஒட்டு மொத்த குத்து.. உள்குத்து.

எல்லாரும் திகைச்சிட்டாங்க. எழும்பீட்டாங்க.அவளும் தான்.திரும்பினாள்.

இவள்.. இவள்...

சிலீவ் லேஸ் ஜோதிகா!!!

முகத்தில லேசா கலவரம்.தகராறை பாத்தில்ல.என்னைய பாத்து.சட்டெண்டு திரும்பீட்டாள்.

எனக்குள்ள சிரிப்பு.

காட்டெருமை எழும்பி திருப்பி அடிக்க முதல் கூட்டம் இழுத்திட்டு போய்ட்டுது.பஸ் நிண்டிச்சு. என் ரிமயிண்டர் அடிச்சிச்சு. முன்னுக்கு போனன்.

அவள பாக்க இல்லை அவளில இப்ப காதல் இல்லை.

கூட்டத்தை விலக்கி கொண்டு பாத்தன். அவன்ட கையை இறுக்கி பிடிச்சுக்கொண்டு சமாதானம்.

இது தான் சந்தர்ப்பம். ஓங்கி நாமளும் அவன் மூன்ச்சில நோங்கு நோன்குன்னு நோங்க்கீட்டு ஓடி போய்டுவமா.நொங்கேலை.அவனை தட்டி கேட்டன்.

என் மீதி சல்லி 7/-.

நிமிந்து பாத்தான். கடுப்பிண்ட உச்ச கட்டம்.

கூட்டத்தை பாத்தான்.கூட்டம் என்னை. நான் அவனை.

வாயோரமா ரத்தம் பாத்தன்.

டவுசர் பொக்கேட்டுக்குள்ள ஒளிச்சு வச்சிருந்த சில்லறையில எடுத்து தந்தான் . எனக்குள்ள சிரிப்பு.

"சில நேரங்களில அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டாங்க"




Sunday, August 5, 2012

நொப்பிசன்

பாஸை கையில வாங்கி செக் பண்ணி கொண்டன். பேஷன்ட் நேம், சரி, எஸ்.ஐ.சி.யூ.
ஒ. கே.
மார்னிங் 9.30 - 10 .30 ஈவ்னிங் 3 .30 - 4 .30,பழைய செடுளை வெட்டி 10.30 -11 .30 , 4 .30 -5 .30.

ஒரு துண்டு பேபரில டயிப் பண்ணி பாதி கிளிஞ்ச லமனேட்டோட..

இந்த பாஸை எடுக்க அரை மணித்தியாலம் வெயிட் பண்ணோணும்.. ஆனா இந்த பாஸ் இருந்தா தான் அந்த வீரப்பன் அண்ண உள்ள விடுவார்..

அந்த செக்குரிட்டிய முதல்ல பாத்து திகைச்சு போனன். சுட்டுட்டாங்கள் என்டுச்சினம், இங்க செக்குரிட்டி வேலை செய்யிறீங்கள். உங்க பேர் வீரப்பன் தானே , டிவியில எல்லாம் பாத்திருக்கிறன்.

கேக்கேல.

எந்த நேரமும் மூஞ்ச்சிய விரப்பாவே வச்சிருக்கும். நில்லு ஒரு நாளைக்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்காட்டி...

கவர்னரே வந்தாலும் அவருட்ட பாஸ் காட்டிட்டு தான் போகனும்..அப்பிடி ஒரு ஸ்ட்ரிட்டு..

கொஞ்ச நாளாவே இங்கயே இருக்கிறதால வீரப்பன் அண்ண நல்ல பழக்கம்.
எனக்கு பாஸே தேவையில்ல. ஆனா நான் காட்டாம போனதில்ல.

காலமை செடுல் முடின்ச்சா ஈவ்னிங்குக்காக ரிசப்சனுக்கு பக்கத்தில வெயிட் பண்ணோணும்.. "ப" வடிவில மூணு ,திரீ இன் எ ரோ காங் சேயார் போட்டிருக்கும்.

பெசன்ட்ட பாக்கிற நேரம் போக மிச்ச நேரம் எல்லாம் அதில யார் உக்காரிறது எண்டு போட்டி..பின்ன நாள் முழுக்க கால் கடுக்க நினுட்டுரிந்தா நம்மள பாக்கிறதுக்கு கொஞ்ச நாளில யாரவது பாஸ் வாங்கோணும்.

உட்கார்ற மாட்டர் எங்களோடையே ஊறிபோனது.

காலமை எட்டு மணிக்கு ஒப்பிசுக்கு போனா சீட்டில எட்டு மணித்தியாலம் உட்கார்ந்தே வேலை பாக்கிறம். சரி சரி .. உட்கார்ந்திருக்கிரம்.

பிறகு பஸ்சில நல்லா உட்கார கூடிய சீட்டா பாத்தி ஏறி உட்காந்து கொள்ரம்,

அதுக்கு பிறகு வீட்ட போய் டிவிக்கு முன்னால உட்காருரம். உட்கார்ந்து யோசிச்சு பாத்தா ஒரு நாளைக்கு நாங்க படுக்கிறத விட உட்காருர நேரம் கூட..

தமிழ் நாட்டில சீட்டுக்கு போட்டி எண்டா சொல்லவா வேணும். நம்ம நாட்டில மாதிரி வெத்திலைய போட்டுக்கொண்டு ஒரே கதிரேல ஒய்யாரமா காலத்துக்கும் உட்காரமுடியாது. அவ்வளவு போட்டி.

அண்டைக்கு அவ்வளவு இல்லை.

அம்பாந்தோட்டை மாதிரி சொல்லி வச்சு சீட் எடுத்தன்.

இனி பின்னேரம் வரைக்கும் முகட்டை பாக்கிறது.பக்கத்தில ஏதாவது பிகருங்க வந்தா பாகிறது.வேணும்னா சுத்தி முத்தி பிராக்கு பாக்கலாம்.அஞ்சு நிமிசத்துக்கு ஒருக்கா ஏதாவது சுவாரசியமா நடந்திட்டே இருக்கும். எனக்கு பழகி போச்சு. பாக்கேல.

யாராச்சும் வாழ்க்கைய வெறுத்து பாப்பம் எண்டு ஆசை பட்டா ரெண்டு மாசம் ஒரு ஹோஸ்பிடல்ல போய் தங்கி பாருங்க. வெறுக்கும்.

இதே இடத்திலையே உட்கார்ந்திருக்கொனும். தூங்காமையும் இருக்கோணும்.

ரெண்டு ரீசன்,

பேஷன்ட் முளிச்சிட்டாங்க நீங்க போய் பாக்கலாம்.

ரெண்டு ,

நான் ரிசப்சன்ல வாய பிளந்து கொண்டு தூங்கி , வீணீர், கீணிர் வடிக்க எவனாவது அதை பற்றி ப்ளாக் எழுதிடுவானோ எண்டு பயம்..

இப்பிடியான நேரங்களில பக்கத்தில வயசான கிழவன்கள் தனிய உட்கார்ந்திருந்தா ஒரு ஆறுதல். சிம்பு தனுஸ் பிரண்ட்ஷிப். கௌசல்யா நித்தியானதா ஆச்சிரம விசிட் எண்டு ஹாட்டா பேசாட்டிலும் , ராஜீவ் காந்திய ஏன் போட்டாங்க, காந்திய ஏன் சுட்டாங்க வரைக்கும் ஆறிப்போன விசயங்கள பக்கத்தில இருந்து பாத்தவங்க மாதிரி காதுகடிப்பாங்க. வழமையா சுச்சு வருது வயிறு கிளறுது எண்டு ஏதாவது சொல்லீட்டு எஸ் ஆகிறது.

சார் தமிழுங்களா. ஐ யாம் மது,புறம் சிறிலங்கா பேச்ச ஆரம்பிப்பமா..

பக்கத்தில ஒரு நடுத்தர வயசு சொட்டை. கிழவன் எண்டு சொல்ற அளவுக்கு அதுக்கு வயசில்ல. அங்கிள் எண்டு சொல்ல எனக்கு மனசில்ல.

ஒரு எறும்பு இன்னொரு எறும்புக்கு லிப் டு லிப் குடுத்துக்கொண்டு இருந்திச்சு. இந்த சொட்டை அதை விரச்சு பாத்துக்கொண்டு இருக்குது,

கொஞ்ச நேரத்தில பாத்தன் . எறும்பு இல்லை..அதே பார்வை.

இவரும் ஹஸ்பிடலில ரெண்டு மாசம் இருந்திட்டார் போல.. அது தான் வெறுத்து போய் உட்கார்ந்திருக்கார். ஆனா முன்ன பின்ன பாத்தது இல்லை.

குரலை இருமி பாத்தன். காலை முன்னுக்கு பின்னுக்கு அசச்சு பாத்தன். கைய மேல தூக்கி ஸ்ட்ரெச்சிங் பண்ணி பாத்தன்..பாக்கேல. கொஞ்ச நேரம் விட்டுட்டன்.

யோவ் சொட்டை ஏதாவது பேசுடா. தூக்கம் தூக்கமா வருது.

நாங்கெல்லாம் அந்த காலத்தில எண்டு ஆரம்பிச்சு வாழ்கையிண்ட தத்துவத்தை சொல்லுவீங்களே இப்ப ஏதாவது சொல்லுயா யோவ்.

எனக்கு சுச்சு வராது , வயிறு கிளராது..கத்தோணும் மாதிரி இருந்திச்சு. கத்தேல..

கொயாள ஏதாவது ரேச்போன்ஸ் இருக்கா பாரு .. ஒரு வேளை பூட்ட கேசா, லேசா அசைவு இருக்கே. இளவு சவாரியா எனக்கெண்டே வந்து வாய்க்குதுங்க பாரு. சென்னை ஆட்டோ காரங்க கத்துக்குடுத்தது.

அந்த சொட்டைய பாத்தாலே எனக்கு தூக்கம் தூக்கமா வருது. தூங்கேல.

மூணு மணி போல வெளில போயிட்டு மத்தியானம் சாப்பிட்டு அங்க இங்க சுத்தீட்டு நாலரைக்கு ஈவ்னிங் செடுளுக்கு வந்தன். சொட்ட அசையாம இருந்திச்சு. ஈவ்னிங் செடுல் பிறகு உட்காருறது எண்டு ஏழெட்டு மணி வரைக்கும் போச்சு.

இரவு சாப்பாட்டுக்கு பிறகு விசிட்டர் ரூமில போய் படுத்துக்கலாம். நல்லா மல்லாக்கா சாய்க்க கூடிய கதிரை.. பான் லயிட் எண்டு வசதியா இருக்கும், ஆம்பிளைகளுக்கு அந்த இடம். அதே இடதிண்ட முடிவில ஒரு கதவு இருக்கு அதுக்கங்கால பொம்பிளைகள். வெளில போக வாசல் ஒன்னு தான்.

காலமையே பாத்தன். "எங்கேயும் எப்போதும்" அனன்யா மாதிரி ஒரு பிகர். எறும்பு கடிச்சு தடிச்ச மாதிரி கீழ் உதடு. எறும்பு மட்டும் கடிச்சிருந்தா அந்த எறும்..பை..

சின்ன தோடு சின்ன மூக்கு அதில மூக்குத்தி. இப்பெல்லாம் ஜீன்சும் டீசெர்ட்டும் வசதி என்றதாலையும் தலை முடி ஸ்ட்ரஇட் பண்ணி போனி டெயில் போடுரதாலையும் மூக்குத்தி கலாச்சாரம் குரஞ்ச்சிட்டு. பொட்டும் தான். தீக்குச்சிண்ட பின்புறத்தால வச்சிருக்கோணும். அவளவு சின்னது. ஸ்டிக்கர் இல்லை. பாத்துக்கொண்டே இருக்கலாம். சான்ஸ் கிடைக்கேல.

எண்டாலும் மனசுக்குள்ள ஒரு ஆசை. இந்த ரூமில அவள பாக்க மாட்டமா. மனசு தான் கேட்டுச்சு. கண்ணிரண்டும் கேக்கேலை. காலமேல இருந்து உட்கார்ந்து டஎர்ட்.. இப்ப தூங்கோனும். தூக்கம் தும்மல மாதிரி டக்கெண்டு வந்திட்டுது. எனக்கெண்டு வசதியா ஒரு சீட்ட பாத்து உட்கார்ந்து கொண்டன்.

சில செக்கனுக்குள்லையே நரை முடி பக்கத்தில. தொலன்ச்சாடா மது, தூக்கம் வருது , இப்ப வாய குடுத்து மாட்டீடாத. பெரிசு என்ன கதைச்சாலும், பிதாமகன் விக்கிரம் மாதிரி ரியாக்சன் குடு அது போதும். அடுத்த செக்கனே பேச்சு ஆரம்பிச்சுது, என்ன வசியமோ , நான் பிதாமகன் சூரியா ஆகீட்டன்..

அவ்வளவு விஷயம் கதைச்சம்.

ராஜீவ் காந்திய ஏன் போட்டாங்க, காந்திய ஏன் சுட்டாங்க.

கடைசியா ஈழ தமிழருக்கு கலைஞ்சர்ட ஆதரவ பற்றி தொடங்கிச்சு பெரிசு. அது சூரியன்.

எனக்கு ச்சுச்சு வருது வயிறு கிளறுது.

கடுப்பில கிளம்பீட்டன். தூக்கம் போயிட்டுது.

வெளில ஒரு குட்டி சுவர் இருக்கு. அதில சாஞ்ச்சு நிக்கலாம். காத்து வாங்கலாம். நிண்டன்.. வாங்கினன்.. பக்கத்தில பொட்டு மூக்குத்தி. அனன்யா .. சுடிதார்..

பேச்சு குடுப்பமா, எனக்கு வாய் மட்டும் தான். ஒரு பிகரோட ரொமான்ஸ் ஆ பேசுறதுக்குள்ள சுச்சு வந்த்திடும். அவளுகளா பாத்து பாவம்னு பேசினாத்தான். பேசேல.

கொஞ்ச நேரம் கைய கட்டிக்கொண்டு கீழ பாத்திட்டு நிண்டாள், பிறகு ஒரு கை கட்டியே இருக்க மட்ட கையாள தேச்சுக்கொண்டே. மூக்கை உறிஞ்சினாள். கொஞ்ச நேரம் ஏதோ யோசிச்சிட்டு உள்ள போயிட்டாள், நானும் உள்ள போனன். அந்த கிழவண்ட வேற ஒருத்தன் மாட்டியிருந்தான், நல்லா வேளை. இன்னொரு கதிரையா பாத்து சாஞ்சு கொண்டன், தூக்கம் வரேல, மெடிக்கல் ரிப்போர்ட் ஓட நாலஞ்ச்சு புத்தகங்களை சொருகி வச்சிருந்தன்,

சேட்டன்ட திரீ மிஸ்டேக்.

ஒரு பக்கம் தாண்டி இருக்க மாட்டன். யாரோ என்னையே பாத்திட்டு இருக்கிற மாதிரி இருந்திச்சு, அனன்யாவா இருந்தா.

பாத்தன். அனன்யா தான்.

பாக்கிறாள்..

கொஞ்சம் தயக்கமா..

கிட்ட வாறாள்

என்னட்ட தான்..

அடி வயுத்த கலக்குது.

"எக்ஸ்கியுஸ்மீ, பாத்த உடனேயே விழுந்திட்டன். ஐ லவ் யு "

மனசு எதிர் பாத்திச்சு.

எக்ஸ்கியுஸ் மீ உங்க கிட்ட வேறெதாச்சும் புக் இருக்குமா எனக்கொண்டு தரமுடியுமா?

புருவத்தை உயர்த்தி, கண்ண விரிச்சு தலைய ஆட்டி,

எடுத்து குடுக்க சொல்லி நான் சொல்லவே இல்ல. கை என் பேச்சை கேக்கவே இல்லை..

மார்னிங் ரிட்டர்ன் பண்ணிடுரன் , தலைய அசச்சு தேங்க்ஸ் . உதட்டை நெளிச்சு சிரிப்பு, போயிட்டா..

இனி ரெண்டு நாளைக்கு தூக்கம் வராது.

காலேல எழும்போணும், பாஸ் எடுக்கோணும்,

இப்ப படுத்தா தான் பிறகு உக்காரலாம். புரண்டு பாத்தன் வரேல, குப்புற படுத்தன் வரேல , திரும்பி மற்றபக்கம் படுத்தன்,

சொட்டை விரச்சு பாத்த படி படுத்திருந்திச்சு. எனக்குள்ள லேசா சிரிப்பு.

தூங்கீட்டன்..

திடுக்கிட்டு எழும்பினன், ஒரே இரைச்சல் சத்தம். தலைய இழுத்து வாரிக்கொண்டு பொம்பிளைகள், ஆம்பிளைகள் சரத்தை கட்டிக்கொண்டு வெறு மேலோட தோளில துவாய் , வாயில பிரஷ் உதடு முழுக்க பேஸ்ட்.. இதோட அரட்டை. நல்லா காலம் டூத் பிரஷையும் பேஸ்டையும் கண்டு பிடிச்சவன் இந்த காச்சிய பாகேல. பாவம்யா அந்த பிரஷ். எவ்வளவு நேரம் தான் தேப்பீங்க.

பக்கத்தில சொட்டை இல்லை. அனன்யாவும் இல்லை. புக் எனக்கு பக்கத்திலையே இருந்திச்சு. ஒரு தாங்க்ஸ் கூட சொல்லாம போய்டாளே.

காலமை செடுல் வழமை மாதிரி, இனி உட்காரோனும், சொட்டை உத்கார்ந்திருந்திச்சு. இண்டைக்கு காம்படிசன் கூட, எவனாவது எழும்ப மாட்டானா எண்டு எக்கச்சக்க பேர்.

சொட்டை அசையாது மிச்ச எட்டு சீட் எண்ட டார்கெட். முந்தி அடிச்சு உட்காருறது சரியில்ல. நாங்க எல்லாம் பபிளிக்கில டீசென்ட்டு. ஒரு சீட் பிரீ, பாதி உட்கார்ந்திட்டன், கம்பெடிட்டார் ஒரு அண்டி பக்கத்திலையே நின்னு பாத்திட்டு இருந்திச்சு, மனசு கேக்கேல விட்டு குடுத்திட்டன்.

அவாவோட பக்கத்தில நிண்டது அனன்யா, என்ன தெரின்ச்ச மாதிரியே ஒரு ரியாக்சனும் இல்லை.

நிறைய பேருட்ட புக் வாங்கியிருப்பாள் போல,

நானும் கணக்கேடுக்கேலை, நேற்றைய காதல் நேற்றோட ..நமளுக்கெல்லாம் காதல் கரண்டு பில் மாதிரி மாசா மாசம் எக்கச்சக்கமா வந்திட்டே இருக்கும் , அத எல்லாம் கணக்கெடுத்தா புலைப்ப பாக்க முடியுமாஎன்ன,

கால் கடுக்க தொடங்கீட்டுது, அநியாயத்துக்கு நல்லவன்டா நீ.. காலை மாத்தி மாத்தி ஊன்டிக்கொண்டன். இப்ப பெரிசா காம்பெடிசன் இல்லை , யாரும் எழும்பவுமில்ல, ஒரே காம்பெடிசன் அனன்யா.

எங்களுக்கெல்லாம் காதல விட கால் வலி தான் பெரிசு. அடுத்த சீட் காலி ஆச்சு அவள பாக்க கூட இல்லை , உக்கார்ந்திட்டன், மணி மூணரை ஆகுது, மத்தியானம் சாப்பிடவும் இல்லை.சீட்டு போயிடுமே.


சொட்டைய பாத்தன்.. தூக்கம் வருது.. அசைவே இல்லை.

திடீரெண்டு எறும்பு கடிச்ச மாதிரி திடுக்கிட்டு எழும்பிச்சு. மணிக்கூட்டை பாத்திட்டு, நடக்க தொடன்கீச்சு, பேஷண்ட பாக்க தான் போகுது, ஆனா இப்ப பாக்க முடியாதே, கையில பாஸும் இல்லை, வீரப்பனை தாண்டி போகவும் முடியாது. எக்கச்சக்க குழப்பம்.. பாஸை காட்டுற மாதிரி வெறும் கைய காட்டிச்சு. வீரப்பனும் ஒன்னும் சொல்லேல, கண் வெட்டாம பாத்திட்டு இருந்தார், குழப்பம் துரியத்துக்கு ஏறீட்டுது, கஷ்டப்பட்டு பிடிச்ச சீட்டை விட்டு எழும்பீட்டன்.

யாரன்ன அவர் , இப்ப பேஷண்ட பாக்க போறார், கசுவலா கதைக்கிற மாதிரி பேச்சுக்குடுத்தன்.

யாரு..நொப்பிசன் சாரை கேக்கிரியாப்பா...

பாவம்பா அந்த ஆளு, நம்ம சீயிப் டாக்டரோட குளோஸ் பிரண்டு தான்.

வயிப்பையும் பிள்ளையையும் ஒரே அக்சிடென்டில குடுத்திட்டாரு. அதுக்கப்புறம் இப்பிடி தான்.

ஆமாப்பா காசு உழைக்கிறன் எண்டு பாதி நாளை குடும்பத்தை பிரின்ச்சு வெளி ஊரிலையே களிச்சிட்டாறு, ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஒரு அக்சிடென்டில வயிப்பும் பிள்ளையும் காலி,

அந்தம்மா ஒரு வாரமா கோமாவில இருந்திச்சு, பொண்டாட்டிண்ட குரலை கடைசியா ஒருக்கா கேக்க மாட்டமா எண்டு இங்கயே ராப்பகலா இருந்தாரு, அந்தம்மா கண் முழிக்காமையே போய் சேர்ந்திட்டுது.

எப்பவாவது இப்பிடித்தான் பொண்டாட்டி பிள்ளைட ஜாபகம் வரும் போது இப்பிடி ஆகீடுவாரு.

அந்தம்மா இன்னும் கோமாவில இருக்கிற மாதிரி வந்து பாப்பாரு, நாளைக்கு சரியாகிடும் போயிடுவாரு..

ம்ம்..என்னத்தை உழச்சு என்னத்தை கண்டாரு. கடைசியா பொண்டாட்டி பிள்ளைங்களோட இருக்க குடுத்து வக்கேல..

யாரும் கேக்க மாட்டாங்களா எண்டு பாத்துக்கொண்டு இருந்த மாதிரி மனசில இருந்த பாரத்தை அப்பிடியே இறக்கி வச்சார், இப்ப எனக்கு பாரமாகீட்டுது. கண் வெட்டாம அந்த சொட்டைய , இல்லை நொப்பிசன் சாரை பாத்திட்டு இருந்தன்,

மனசுக்குள்ள முடிவு பண்ணினன், காசு உழைக்கிறதெண்டு வெளிநாட்டு வாழ்க்கை எனக்கு வேண்டவே வேண்டாம்...

இப்ப நான் லாவோசுக்கு உழைக்க வந்திருக்கிறன் !!!!















Tuesday, July 17, 2012

போர் பென் யாங்..

நாக்கை மேலண்ணத்தில தாங்கி எச்சில எடுத்து அடித்தொண்டையை நனைச்சுக்கொண்டன், வலக்கையிண்டை அஞ்சு விரலையும் சேர்த்து இடக்கையுக்குள்ள புதைச்சு முறுக்கி விட்டன்.
பின்முதுகில லேசா குளிர் படர கன்னம் இரண்டும் சிலிர்த்திச்சு.
பிறகு கை. அதுக்குப்பிறகு நெஞ்சுப்பக்கம்.
கால் ரெண்டும் ஒட்டினபடி. கை துடையில தாங்கினபடி.

முன்னால இருந்த டாப்சி பாக்கிராளா எண்டு காம்புயுடெரை தாண்டி எட்டிப்பார்த்தன், இண்டைக்கு வெள்ளை ஷர்ட் கொஞ்சம் டைட்டா. போர்டர் கருப்பு. வழமை மாதிரி தலைமுடியை கலைச்சு தவள விட்டுருந்தாள் ,சைடு உச்சி பிரிச்சு நடுவில பட்டர்பிளை கிளிப், பாதி முடி ரெண்டு தோளையும் தாண்டி முன்னுக்கு தவண்டு கொண்டிருந்திச்சு.

வழமை மாதிரியே கையால கோதி விட்டுக்கொண்டிருந்தாள்...

இண்டைக்கும் என்னை பாகேல..

நல்ல வேளை..

முதல் நாள் என்னை அவள்ட இன்றோடியூஸ் பண்னேக்கையும் இதே உடுப்புத்தான், இதே ஹேர் ஸ்டைல்.
இதே மாதிரி என்னை கணக்கெடுக்கேலை,

ஹல்லோ ஐயம் மது,கையை நீட்டினன்,

ரெண்டு கையையும் கூப்பி "சபாய் டீ" எண்டு லேசா குனிஞ்சு எழும்பினாள்.

தலை முடி முன்னுக்கு தவண்டு வந்து பின்னுக்கு போய் தோளை ரெண்டு தரம் தட்டி ஓஞ்சிச்சு, களுத்தில இருந்த சங்கிலியும் ரெண்டு முறை நெஞ்சை தட்டி ஓஞ்சிச்சு, என்ட மனசு மட்டும் ஓயல.

கும்பிட்டுட்டு லேசா பல்லு தெரிய சிரிச்சுக்கொண்டு இருந்ததை கண் வெட்டாமை பாத்துக்கொண்டிருந்தன்,இப்பிடியே இண்டைக்கு முழுக்க பாத்துக்கொண்டே இருப்பமா !!!

அவள் அச்சு அசல் ஆடுகளம் டாப்சியே தான்.

சிரிச்சுக்கொண்டே எண்டை கையை பாத்தாள், ஏதோ கோயில்ல பிரசாதம் வாங்க வந்தவன் மாதிரி நீட்டிகொண்டிருந்தன்,

கரண்ட் அடிச்ச மாதிரி கையை சடாரெண்டு எடுத்து நோண்டியை சமாளிக்க அசட்டு சிரிப்பு.

நானும் கையை கூப்பி வணக்கம் டீ... தமிழன்டா..

வேசாமவள் நோண்டி ஆக்கிடாள், கையை குடுத்தா என்ன குறஞ்சா போயிடுவாள்.

ஒரு நாளைக்கு வரட்டும் நோண்டி ஆக்கி அனுப்புறன்.

மனசு தான் சொல்லிச்சு ஆனா அவள் அதுக்கு பிறகு என்னட்ட வந்து ஏதாவது கேட்டிருந்தா பல்ல இளிச்சுக்கொண்டு போயிருப்பன்,

என்னை மாதிரி பெடியல்ட வீக்நெஸ் அது தானே.அவள் வரேல.

ஒபிசில எண்ட ரூம் சேரன் படம் மாதிரி எப்பவும் அமைதியா தான் இருக்கும். நானும் அவளும் மட்டும் தான்.

ஆனா பக்கத்தில ராஜேஷ் படம், கத்தரிக்காயை மூணு நாள் பிரீசருக்குள்ள வச்சு எடுத்த மாதிரி சூம்பி போயிருக்கும் அவன்ட மூஞ்சி, ஒவ்வொரு டேபிளா போய் கொஞ்ச கொஞ்ச நேரம் மொக்கை போட்டுட்டு வருவான்,
ஒரு நாள் டீ ஊத்திற அண்டி ஊத்தாமை பாத்துக்கொண்டு இருக்க, கத்தரிக்கா வந்து மொக்க போட்டத்தான் அடுப்பே பத்த வப்பன் எண்டுறா,அந்தளவுக்கு, பவர் ஸ்டாரை விட சனியன் ரகளை பண்றான்.

அவன்ட விசயத்தில நான் டாப்சி, கணக்கே எடுகிரதில்ல,

ஆனா அப்பப்ப வந்து மொக்கை போட்டுட்டு போவான்,அவனுக்கெண்டு ஒரு சிரிப்பு வச்சிருக்கன்,அவன் வந்தா போகும் வரைக்கும் அதே சிரிப்புத்தான்,

வருவான் ஏதோ எல்லாம் சொல்லுவான் போவான்..

இன்னொருத்தன் இருக்கிறான். நூடில்ஸ் மண்டையன், பத்து மணி ஆனா காணும் சட்டுப்புட்டேண்டு அவசர அவசரமா எங்கையோ கிளம்பி போயிடுவான்.

கொஞ்ச நேரம் கழிச்சு ஏதோ சந்த்ராயனை ரோக்கேடில விட்டுட்டு வந்தவன் மாதிரி வந்து இருப்பான்,

அவன் எங்க போறான், என்னத்தை சாதிச்சிட்டு வந்து இப்பிடி உட்காருறான் எண்டு இண்டைக்கு வரைக்கும் எனக்கு விளங்கேல.

இண்டைக்கும் காலமை பத்து மணிக்கு போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வந்தான், முகத்தில ஒரே வேர்வை, கங்கி எடுத்து துடச்சுக்கொண்டான்.

ஏதோ பிரச்சினையை முடிச்சிட்டு வந்திருக்கிறான், இண்டைக்கு போய் கேட்டிட வேண்டிய தான்,

டேய் நூடில்ஸ் எனி புறப்லம்??

போர் பென் யான்..மிஸ்டர் மது,

லேசா அசட்டுத்தனமா, கொஞ்சம் கணக்கெடுக்காதனமா,

எனக்கென்ன வந்திச்சு,ஏதாவது பிரச்சினை என்டா கெல்ப் பண்ணலாம் எண்டு தான்,

மற்ற பக்கம் எல்லாம் பெட்டைகள் தான், ரெண்டு மூணு தரம் சீட்டை விட்டு எழும்பி சுச்சுக்கு போறது, அந்த நேரம் அவளுகளை கடக்கன்னால பாகிறது,

இண்டைக்கு காலமை வந்ததில இருந்து அடி வயுத்தில சின்ன மாற்றம், பெரிசா கணக்கெடுக்கேல , ஒரு நாலு மணிக்கு கொஞ்சம் சீரியஸ், ரெண்டு மணில இருந்து குமிரின வயிறு இப்ப கொந்தளிக்க தொடங்கிட்டுது ,

நல்ல வேளை இன்னும் சத்தம் வெளில வரேல,

எப்படா ஆறு மணி வரும்,

வழமையா கலாமை எழும்பி தண்ணி குடிச்சு கிடிச்சு நல்ல வடிவா இருந்திட்டு தான் போறனான், இவ்வளவு காலமும் எனக்கு இப்பிடி பிரச்சனை வந்ததே இல்லை இப்ப மட்டும் ..ஏன்..

சரி வந்தா போய் இருந்திட்டு வாயேன் இதெல்லாம் ஒரு மாட்டரா..
அப்பிடி லேசா சொல்ல கூடிய விஷயமில்ல,

இது எண்ட கௌரவ பிரச்சனை,

ஒபிசுக்கு வந்திட்டு அவசர அவசரமா டொயிலட்டுக்கு ஓடிப்போய்டு மாடர முடிச்சிட்டு வரேக்கை எல்லாரும் ஒரு மாதிரி பாபான்களே எண்டு ஒரு பயம்,

எனக்கு அது கௌரவ குறைச்சல்,

பாழப்போன ஆயிக்கு தெரியுமா எண்ட கௌரவத்தை பற்றி ,

லேசா வெடிக்க தொடங்கீட்டுது,

ஆயி ஆத்திரம் மாதிரி அடக்கி வச்சிருந்தா பிச்சுக்கொண்டு வெளில வந்து நாறடிச்சிடும்,

ஆசன வாயை இறுக்கி பொத்திக்கொண்டன்.மூச்சை நல்லா முதுகுத்தண்டு வழியா இழுத்து துரியத்துக்கு ஏத்தி மூக்கு வழியா ஓயஸ் மூச்சை லேசா விடேக்க கொஞ்சம் ஆறுதலா இருந்திச்சு,

கனகாலமா செய்யாத காயகல்ப்ப பயிட்ச்சியை என்னை அறியாம செஞ்சு கொண்டிருந்தன் ,

முதுகு பக்கம் , நெஞ்சு பக்கம் திரும்பவும் புல்லரிச்சுது , எவ்வளவு நேரம் தான் கையை முறுக்கிறது,

இனி தாங்காது, டோயிலட் போற வழில பிகருகளை கடக்கன்னால பாத்தன்,

என்னையே பாக்கிற மாதிரி இருந்திச்சு,

கதவை திறந்து கொமேட்டை பாத்தன் நல்லா கிளினா இருக்கு, டிசு இருக்கு, நம்மளுக்கு பழக்கமில்ல , ஷவரை எடுத்து தண்ணி வருதா எண்டு அடிச்சு பாத்தன், சரி இனி குந்த வேண்டியது தான் எண்டு நினைச்சு முடிக்கிறதுக்குள்ள,
வரும் போது அந்த பிகருகள் என்ன பாத்தது ஒரு மாதிரி இருந்திச்சு,

இன்னும் கொஞ்ச நேரத்துக்குள்ள போகாட்டி நான் இருக்கிறது தெரிஞ்ச்சு போயிடும்.

நினைப்பு அந்த இடத்தை விட்டு என்னை கிளப்பீட்டுது,பைப்பை திறந்து கையை நனைச்சிட்டு திரும்பி போயிட்டன்.

கௌரவத்தை காபாதிட்டன்,

கொஞ்ச நேரத்துக்கு எனக்கு வரேல, அதுக்கு பிறகு திரும்பவும் ஜுராசிக் பார்க்..அது என்ன சத்தம் குர்ர் எண்டு..

சத்தம் வெளில வருதா எண்டு வைத்துக்கு கிட்ட காதை கொண்டு போய் செக் பண்ணினன், வரேல.

கொஞ்ச நேரத்தில திரும்பவும் உடம்பு சிளித்திச்சு, இப்ப தான் போயிட்டு வந்ததால உடன திரும்பவும் போகேலாது . சலரோக காரன் எண்டு நினைச்சிடுவாங்க, ஆனா என்ன செய்யிறது, இதுக்கு மேல முடியல , பாதி எழும்பீடன் ,

ஹாய் மிஸ்டர் மது,

அதே சூம்பி போன கத்தரிக்கா,

இந்த அவசரத்தில இந்த கொடுமை வேறையா,அஞ்சு நிமிஷம்...நகர முடியேல..நரக வேதனை,வெளிலையும் சொல்ல முடியாது,

உள்ளுக்குள்ள இவ்வளவு ரணகளம். முகத்தில எந்த சலனமும் காட்டாமை சிரிக்கோணும், நான் நடிகண்டா.

ஒரு கட்டத்தில பிச்சிக்கொண்டு வந்து லேசா பிரின்ச்சுது,நல்ல வேளை அது வாயு புத்திரன்,

கொஞ்ச நேரத்துக்கு ரிலிஸ். திரும்பி தொடங்காம இருக்கோணும்,

நான் முதல்லையே இருந்திருக்கலாம்,கௌரவம் தடுத்திட்டுது.

இந்த வறட்டு கௌரவம் இண்டைக்கு நேற்று வந்ததில்ல,

அஞ்சாம் ஆண்டு படிக்கேக்க எண்ட கிளாசில ஒரு பெடியன் அடக்க முடியல , காச்சட்டையோட போயிட்டான்,நாத்ததோட சேர்ந்து இந்த விஷயம் கிளாஸ் முழுக்க பரவீட்டுது.அண்டையில இருந்து அவனை எங்கட பெடியள் பாக்கிற விதமே வேற மாதிரி இருந்திச்சு , அவன் மட்டும் இல்லை , கிளாசில அவசர அவசரமா யாரும் எழும்பி டொயிலட்டுக்கு போனா அவன ஒரு மாதிரி பாப்பான்கள்,
சில நேரம் நக்கல் அடிப்பாங்கள்,
அவனுக்கு கௌரவ பிரச்சனை ஆயிடும்,

இந்த சம்பவம் எண்ட மனசில ஆழமா பதிஞ்சிட்டுது, இத்தனை வருஷம் கௌரவத்தை காப்பாத்திட்டு வாறன்,

ஆனா இண்டைக்கு.

அஞ்சு மணிக்கு அஞ்சு நிமிஷம், இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு , பொறுமையா இருந்திடுவமா .. வீட்ட போய் பாத்துக்கலாம் ,..

திரும்பவும் சிலிர்க்க தொடங்கீட்டுது.இப்ப உச்ச கட்டம், கையை இறுக்கி முறுக்கி கொண்டன்,

எக்ஸ் கியூ ஸ் மீ..

டாப்சி.. உதடு ..

கை லூசாச்சு..

ரெண்டாவது வார்த்தை ..

நம்ப முடியேல ,,

வார்த்தை வசனமாச்சு..

ஏதோ டவுட்டாம் கிளியர் பன்னோனுமாம்,

எனக்கு கொஞ்ச வேலை இருக்கு அவசரமா கிளம்பிரன் பிறகு கூபிடவா , அடிச்ச மாதிரி சொல்லீட்டன்..

அவள்ட முகத்தில ஏகப்பட்ட எக்ஸ்பிரசன்..

பாத்து ரசிச்சிருக்கலாம், ரசிகேல..

அவள நோண்டி ஆகிட்டான்.சபதம் நிரவேரிட்டு. இனி கூந்தலை முடிஞ்சுக்கலாம்.

வேணுமெண்டு செயேல, நிலைமை அப்பிடி,

காடாறு மடைய உடைக்க கொஞ்ச நேரம் தான்..

இனி முடியாது உச்ச கட்டம்..கிளம்பீட்டன்,வழில பிகருகளை பாகேலை..

கண் இருட்டிகொண்டு வந்திட்டுது ..

கதவை திறந்தன்,

வயிறு சர் பூர் ..

என்ன அவசரம் இன்னும் கொஞ்ச நேரம் தான் ..

கொமெட்டில குந்தினன்..

இரவு ரொட்டியும் மஸ்ரூம்.. காலமை டீ , கோர்ன் பிளாக்ஸ். மத்தியானம் சிக்கின் பிரைட் ரயிஸ்,

உடம்பெல்லாம் வேர்திட்டுது,
எதையோ சாதிச்சிட்ட மாதிரி ஒரு திருப்தி,இளமை திரும்பி வந்தது மாதிரி ஒரு சந்தோம்..

இதுகா இவ்வளவு காலமும் கௌரவம் பாத்திட்டு இருந்த.மத்தவன்கள் யோசிக்கிறத பற்றி நீ ஏன் கவலை படுறா.. அது அவங்க பிரச்சனை.உன் வாழ்க்கை உன்கையில்..
புத்தரும் ஜேசுவும் ஒரே போதனை தான்.அடி வயிறு கிளியர் ஆகிற வரைக்கும்..

மாட்டரை முடிச்சிட்டு வெளில வாறன் எல்லாரும் மூட்டையை கட்டீட்டு கிளம்பீடினம்,

அட.. இண்டைக்கு சனிக்கிழமை,அஞ்சு மணிக்கு ஆப் எல்லா,

கொஞ்ச நேரம் பொறுமையா இருந்திருந்தா வீட்டை போய் முடிச்சிருக்கலாமே,

இல்லை..

எனக்குள்ள இப்ப ஒரு தைரியம்,இனி வாந்தி யாவது பேதியாவது, படுவா வாடா ... பாத்துகலாம்,

வறட்டு கௌரவம் துலன்ச்சு போச்சு.

எண்டாலும் யாராவது நக்கலா பாகினமா எண்டு சுத்தி முத்தி பாத்தன்,

உலகமே எங்கள பாத்திட்டு இருக்கிரமாதிரி நாம தான் நினைச்சிட்டு இருக்கிறம்,அவன் அவனுக்கு சொந்த பிரச்னையை பாக்கவே டயும் சரி,இதுக்குள்ள எங்க நம்மள பாகிறது, எனக்குள்ள திரும்பவும் போதனை,

பட் நூடில்ஸ் மண்டையன் என்னை கவனிச்சிட்டான்,

லேசா சிரிச்சுக்கொண்டே நான் காலமை கேட்ட பாணில கேட்டான்,

மிஸ்டர் மது எனி புராபிலம்,

இப்ப விளங்கிச்சு அவன்ட பத்து மணி பிரச்சனை,

ஏதோ ஞானம் கிடைச்சு தெளிந்ச்சவன் மாதிரி அசடு வழிய தையிரியமா சொன்னன்....

போர் பென் யாங்..

Saturday, February 11, 2012

பிம்பிலிக்கா பிளாப்பி....

5வது பிளாட்போர்முக்கு ஓடோணும்.நினைப்பெல்லாம் ஒண்டுதான்.எப்பிடியாவது ரயினை பிடிக்கோணும் கடவுளே எண்ட சீட்டை யாருமே பிடிச்சிருக்க கூடாது.எப்பவுமே கடைசிக்கு முதல் பெட்டில தான் ஏறுறது.வாசல்ல இருந்து 2வது ரோல இருக்கும் எண்ட சிம்மாசனம்.

ஜன்னலோரமா ஒரு கண்ணாடி போட்ட அண்ண.உள்ள ஏறுற பிகருகளை பாக்காம எப்பவுமே ஜென்னலுக்கு வெளில பாத்து கொண்டே வருவார்.இயற்கையை ரசிக்கிறாராம...கொயாள அந்த இருட்டுகுள்ள ஒரு மண்ணாங்கட்டியும் தெரியிரதுமில்ல.அதுக்கு பக்கத்தில ஒரு அக்கா.அந்த அக்கா ஏறினதில இருந்து போனோட வழியிறதும் குடையிறதும்..ஐயையையோ...இந்த லவ் பண்ணற பொண்ணுங்க மட்டும் எப்பிடி அடுத்தவங்களுக்கு கேக்காம போன் கதைக்கிராளுகளோ தெரியேல..
அடுத்தது எண்ட சீட்டுக்கு பக்கத்தில ஒரு முதலை வாயன்.அந்த சொங்கி, ரயின் கோர்ன் அடிச்ச உடனை ஒரு கொட்டாவி விடுவான்.ரயின் வெளிக்கிட்டவுடனையே வாய பிளந்துகொண்டு தூங்க தொடங்கிடுவான்.அவன பாக்கேக்கை அவன்ட வாயில கரப்பான் பூச்சிய விட்டா எப்பிடியிருக்கும் எண்டு தோணும்.பன்னிக்கு குறட்ட வேற.வீணீர் வடிக்கேக மட்டும் எழும்பி மற்றப்பக்கம் படுப்பான்.

அங்காலிப்பக்கம் எதிரெதிரா 6பேர்.எதிரா கையுக்கெட்டின தூரதில ஜோதிகா.பச்சைக்கிளி முத்துச்சரம் பாத்ததில இருந்து ரயின்ல நல்ல வடிவான பிகருகள் வந்தா அவங்களுக்கு நான் வைக்கிற பெயருதான் ஜோதிகா.
வேறஎதுக்கு கொஞ்சம் கவனமா இருக்கிரத்துக்குத்தான்.
அதுவும் மூக்குத்தி குத்தியிருந்தா பயங்கர உஷாராகிடுவன்.
ஆனா அவள் மூக்குத்தி குத்திரதில்ல. ஆனா அதுக்காக மட்டும் அவள பாக்கிறது இல்லை. மேல் உதட்டை தாங்கிற மாதிரி அந்த சின்ன கீழ் உதடு.நாக்குப்பட்டு லேசா ஈரமாகி காஞ்ச லிப்ஸ்டிக் ஓட சேர்ந்து ஒரு விதமான லயிட் ரோஸ் கலர்ல இருக்கும்.மேல் உதட்டிக்கு கொஞ்சம் தள்ளி ஒரு குட்டி மச்சம். மூக்கு சொல்ற மாதிரி ஏதும் இல்ல. ஆனா மூக்குத்தி இல்லை.
கண்ணை தாண்டி மூக்கு நுனிய அடிக்கடி வருடுற ஒரு கொத்து முடி. மிச்ச முடியை இறுக்கி போட்டிருக்கிற பொனி டெயில். அவளின்டை முகத்தழக சொல்றத்துக்கே இன்னும் ரெண்டு பதிவு போடலாம். மிச்சத்தை சொல்லப்போனா ஒரு புத்தகமே எழுதலாம்.

கெட்டிக்காரத்தனம் எண்டா என்னெண்டு தெரியுமா. பக்கத்தில பாய் பிரெண்டோட இருக்கிற பிகர அவங்களுக்கு தெரியாம பாகிறதுதான். நான் கெட்டிக்காரன்.அதுதான் காதலுக்கு கண்ணில்லையே.
அவன் என்னைவிட கறுப்பு. ஆனா கலேர்சா இருந்தான். ஆனா முடி மட்டும் பாதீல சூபீட்டு விட்ட பனங்கொட்டை மாதிரி இருந்திச்சு. நானும் மின்சாரகனவு அரவிந்த சாமி மாதிரி தலைய வழிச்சு இழுத்து என்ன பிரயோசனம். ஊரில தேங்கா மண்டையங்களையும் பனங்கொட்டை தலையங்களையும் தான் பொண்ணுங்க பாக்குது.
மரவள்ளி கிழங்கு பொரியல்.ஒரு துண்டு அவளிண்ட வாயில அரைபட மற்ற துண்டை அவனுக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள்.அவளிண்ட வாயோரமா கொஞ்சமா ஒட்டிக்கொண்டிருந்த மிளகா தூளை புறக்கையால துடைகேக்க பாக்க அழகா இருந்திச்சு.ஆனா அவனின்ட வாயையும் சேர்த்து துடைக்கேக்க மட்டும் ஏன் எனக்கு
கடுப்பாகுது.

ஜன்னல் கரையில பதட்டமா ஒரு அக்கா. "கொட்டுவ"யில இருந்து கொம்பனி வீதி வரைக்கும் வேர்ல்ட் கப் பயினல் பாகிரமாதிரி டென்சனா உட்காந்திருக்கும். கொம்பனி வீதில அந்த குறுந்தாடி வச்ச அண்ணன் ஏறி எதிர்ல உட்காந்த பிறகுதான் இந்தியன் சப்போர்ட்டர் மாதிரி சந்தோசப்படும். அந்த இடத்தில நான் சிறிலங்கன் சப்போர்ட்டர்.

எதிர்ல உலக அரசியல்ல இருந்து உள்ளூர் அரசியல் வரைக்கும் அங்கிள்ஸ் ரெண்டு பேருண்ட ஓர் அலசல்/அலட்டல். அரசியல விட காதல்ல இண்டரெஸ்டிங் என்றதால எனக்கு காதை விட கண்ணுக்குத்தான் வேலை கூட.
இவங்க எல்லாருக்கும் நடுவில நான். இறங்கிறதுக்கு வசதியா வாசலுக்கு பக்கத்திலையே சீட். எல்லாருக்கும் அவங்க அவங்க வேலை. அவங்கட வேலை எல்லாத்தையும் பாத்து ரசிக்கிறது தான் அந்த 30 நிமிஷமும் எண்ட ஒரே வேலை.

இது எங்கட ரோவில மட்டும். முன்னால இருக்கிற பத்து சீட்டிலையும் மங்காத்தா. எனக்கு கேம் எல்லாம் தெரியாது. ஆனா 6.30க்கு ரெயின் வந்தவுடனையே அதில ஒரு குள்ள அண்ண வந்து மத்த எல்லாருக்கும் சீட்டை பிடிச்சிடுவாறு. தற்செயலா அந்த அண்ண லேட் ஆகி வந்து அந்த சீட்ல வேரயாராச்சும் உட்காந்திருந்தா ஒவ்வொருத்தரா வந்து முறைபாங்க பாரு .கொக்கா இருந்த ஏறின்ச்சிருக்கும்.

கடைசியா அவங்க தல வந்து எப்பிடியோ கதைச்சு பேசி இடத்தை பிடிச்சுடுவாங்க.அதுக்கு பிறகு களை கட்டும் மங்காத்தா.
முதல்ல வெளியில தூக்கி போடுறது ஜோக்கேர்சை.அது தான் ஜோகேர்சா இருக்க யாருமே விரும்பிரதில்ல போல.
யோக்கர் கார்ட்சை அந்த குள்ள அண்ண எடுத்து அவர்ட போக்கேட்டுக்குள்ள வச்சிடுவாரு.அவர் இதுவரைக்கும் விளையாடி நான் பாத்ததே இல்லை.
இது தான் எங்கட கம்பார்ட்மென்ட். எங்களுக்குள்ள அப்பிடி ஒரு அண்டேர்ச்டாண்டிங். யாருமே யாரின்ட சீட்டுக்கும் ஆசை பட்டதில்ல.

ஒரு மாசம் கடுமையான வேலை. ஒபிஸ் முடிஞ்சு லேட் ஆ வாறதால ரெயின மிஸ் பண்ணிடுவன். ஒரு மாசம் கழிச்சு இண்டைக்கு தான் அந்த ரெயின பிடிக்க கிடைச்சுது. ரெயின் மெதுவா நகர்ந்து கொண்டிருந்தாலும் ஒரு மாதிரி தாவி ஏறிடன்.
எண்ட சீட் அப்பிடியே இருந்திச்சு. லெப்டில முதல வாயன் குறட்டைய தொடங்கியிருந்தான். முன்னால போன் அக்கா. பக்கத்தில கண்ணாடி அண்ண.2012 பட்ஜெட் மாற்றங்கள் அங்கிள்ஸ் இன் அனல் பறக்கும் அலசல்.ஜன்னல் அக்கா வழமை மாதிரி பதட்டத்தோட இருந்தா. சரி நாங்க வந்த வேலைய பாப்பம்.

மூக்கு நுனிய வருடி விடுற கொத்து முடி,ஹேர் ஸ்டைல் மாறேல.அதே மரவள்ளி கிழங்கு பொரியல்.ஏன் ஜோதிகா ஒவ்வொரு நாளும் மரவள்ளி சாபிட்டா காஸ் ட்ரபிள் வருமாமே உண்மையா..
கறுக்கு முருக்கேண்டு வாயில அரை பட்டு பளிங்கு மாதிரி இருக்கிற தொண்டையில இறங்கிறது தனியா தெரியும். லேசா விழுங்கினாலும் அந்த கண் ரெண்டையும் நெத்தியோட சேர்த்து சுருக்கி விழுங்கிறன் எண்டிறதை காட்டிற மாதிரி இருக்கும்.

பொதுவாவே அவள் அவனுக்கு ஊட்டி விடும் போது அவள் குடுக்கிற எச்பிரசன்ஐ மட்டும் தான் பாக்கிறது. ஆனா அண்டைக்கு மட்டும் ஏதோ அவனையும் பாத்தன். திரும்பவும் பாத்தன். கண் வட்டாம பாத்தன். அமைப்பான முகம். லேசா தாடை முழுக்க படர்ந்திருக்கிற தளிர் தாடி. நல்ல வாட்ட சாட்டமான உடம்பு. ஆளே மாறி இருந்தான். அவனா இவன் சம்பந்தமே இல்லையே.
எனக்கு ஒருவேளை "ஜமாஸ் வு "வோ
..இல்ல. அவன் பனங்கொட்டை தலையன். இவன் முள்ளு முள்ளு தலையன். ரெண்டு தலையும் வித்தியாசம்.எப்பிடி இது சாத்தியம்.அவளண்ட கொத்து முடி மாறேல, மரவள்ளி மாறேல, சீட் மாறேல. கம்பார்ட்மென்ட் மாறேல. அவன் மாறீட்டான். .இல்லை.அவள் மாறீட்டாள்.

பக்கத்து அங்கிள்ஸ் கதைக்கிற அரசியல விட பயங்கர குழப்பமா இருந்திச்சு. சுத்தியிருந்த ரெயின் மேட்ஸ் இத கண்டு கொண்டதா தெரியேல. கம்பார்ட்மென்ட் மாறாட்டியும் பரவாயில்ல,சீட்டை மாத்தாடியும் பரவாயில்ல. அட்லீஸ்ட் மரவள்ளியையாவது மாத்தியிருக்கலாம்.இப்பிடிஎல்லாமா உலகத்தில சாத்தியம்.

யெஸ்.. காதல்ல எதுவுமே சாத்தியம்.

உண்மையில இப்பத்தான் பக்கத்தில நடக்கிறதை சுத்தி பாக்கும் போது கடுப்பாகுது. முதலவாயன், இருட்டை ரசிகிரவன். போன் அக்கா. அரசியல் அங்கிள்ஸ் எண்டு அவரவர் அவரவர்ட வேலை. நான் மட்டும்??

வாழ்க்கேல தங்க தங்க வேலைய மட்டும் பாத்திட்டு இருக்கிறவங்களுக்கு எந்த வித குழப்பமும் இல்லை போல.

கொம்பனி வீதி ஸ்டேசனை நோக்கி ரெயின் நகர்ந்து கொண்டிருந்திச்சு. இப்ப நான் வேர்ல்ட் கப் பயினல்ல உட்கார்ந்திருந்தன்.
ஏறப்போறது யாரு. குறுந்தாடி அண்ணனா. இல்ல...ஒருவேளை அக்காவும் மாறியிருந்தா!!!

குறுந்தாடி அண்ண வந்து அக்காக்கு பக்கத்தில உட்கார்ந்த போது ஏதோ எனக்கே லவ் செட் ஆனா மாதிரி ஒரு பீலிங்கு. இப்ப நான் இந்தியா டீம்.

ரெயின் மூவ் பண்ண தொடன்கீச்சு. நான் ஏறும்போதே கவனிச்சன். பக்கத்து பெட்டில லேசா ஒரு சலசலப்பு இருந்திச்சு. கொஞ்சம் சத்தமாக நான் திரும்பி பாத்தன். ஒருத்தன் மட்டும் ஆவேசமா நடந்து வந்து எண்ட ஜோதிகாவ பாத்து ஆவேசமா சிங்களத்தில கத்தத்தொடங்கினான்.

மனசில தமிழ் சப் டயட்டில் ஓடிக்கொண்டு இருந்திச்சு.

"ஏண்டி இப்பிடி பண்ணினா. இவன தானே லவ் பண்ணீட்டு திரிஞ்ச. இப்ப இவன பிடிக்கேல எண்டுட்டு இன்னொருத்தனோட இருக்க. சாகிற லெவலுக்கு போயிட்டான்". பின்னுக்கு பனங்கொட்டை தலையன் பம்மீட்டு வேணாம் வேணாம் எண்டு தடுத்துட்டு நின்னான்.

அரக்கைக்கு மடிச்சிருந்த புல் கை ஷர்ட்ஐ அடிக்கடி இழுத்து விட்டுக்கொண்டு முள்ளு முள்ளு தலையனும் அவனை தடுத்துக்கொண்டு என்ன செய்யிற எண்டு தெரியாம ஜோதிகா. அரசியல் பேச்சு நின்டிருந்திச்சு. போனும் நின்டிருந்திச்சு. குறட்டை மட்டும் நிக்கேல. சப் டயிட்டில் தொடர்ந்திச்சு. "மச்சான் இவள நம்பாத. எண்ட பிரண்ட மாதிரி உனக்கும் பூட்ஐ வச்சிடுவாள். சாமான் கேசுடா இவள்".
சொல்லி முடிச்சொன ..
"என்ன பிரச்சனை என்ன பிரச்சனை".. முதல்ல பாஞ்ச்சு வந்தது ஜோக்கர் அண்ண. கத்தலை ஒரு மாதிரி சமாதான படுத்திக்கொண்டு அடுத்த கம்பார்ட்மென்ட் வரைக்கும் அவங்கள இழுத்திட்டு போனது அவர் தான். ஜோகேர்ஸ் ஹீரோ ஆக கூடாது எண்டு சட்டமா என்ன..

இருட்டு வேடிக்கை, போன், குறட்டை எல்லாமே தொடர்ந்திச்சு. ஜன்னல் அக்காவ அந்த குறுந்தாடி அண்ண பாத்த அந்த பார்வைதான் ஹையிலயிட். இவ எனக்கு எப்ப பிம்பிலிக்கா பிளாப்பி சொல்லப்போறாலோ...

தலையில கையை வச்சு லேசா தலைய தோளில சாச்சுக்கொண்டான் முள்ளு முள்ளு தலையன். ஜோதிகாகு முகம் முழுக்க சிவப்பா இருந்திச்சு. கவலையில கூட செம்மையா இருக்கிறாள்.
எல்லாமே பழைய நிலைமைக்கு திரும்பீடுது. எண்ட மனசு மட்டும் சம்பவத்துக்கு காரணம் தேட தொடங்கீட்டுது.

ஒரு பொண்ணு ஐஸ்கிரீம் சாப்பிடுரதையோ, கைய ஆட்டியாட்டி பேசுறதையோ, புருவத்தை சுருக்கி சிரிக்கிரதையோ பாத்து பிடிச்சு இருக்கு எண்ட நினைப்பில ரோஸ்ஐ நீட்டீரானுகள். அதே அழகை நிச்சயமா அவன் இன்னொரு பொன்னிட்ட கட்டாயம் கொஞ்ச நாளில பாப்பான். இன்னும் கொஞ்ச நாளில இன்னொரு பொன்னிட்ட.இப்பிடி அழகா தெரியிற எல்லாரையுமா லவ்வராக்க முடியும்.

கடசீல பாத்தா ரோஸ் குடுக்க முதல் பாத்தா அந்த ஒண்டு ரெண்டு விஷயம் மட்டும் தான் அவள்ல பிடிச்சே இருக்கும். பிடிக்காத விஷயம் நிறைய இருக்கும்.

இது தான் பாத்த உடன வருற லவ்வுக்கும் பழகி பாத்து வருற லவ்வுக்கும் உள்ள வித்தியாசம்.
நான் ஒன்னும் பொண்ணுங்க விசயத்திலையோ காதலிலையோ ஸ்பெசலிஸ்ட் எல்லாம் கிடையாது. எத்தின பிரண்ட்ஸ் இட காதல பாத்திருப்பம். அத விட எத்தினை சினிமா பாத்திருப்பம் .

அது தான் சொல்லுறன் பாயிஸ் பதினாலந்திகதி, ஐஸ்கிரீம் சாபிடேக்க அழகா இருந்தாள். மூக்கு சீரேக்க அழகா இருந்தாள் எண்டு அவசர பட்டு யாருக்காவது ரோசை நீட்டிநீங்க.. அப்புறம் உங்களுக்கும் பிம்பிலிக்கா பிளாப்பி தான்.

Tuesday, January 31, 2012

கண்ணன் டிரைவர்

வெறும் காத்துதாங்க வருது எண்டு ரேவதி சொல்ற மாதிரி வாய்ஸ் தான் அவர்ட ரியல் வாய்ஸ்.எங்களோட கதைச்சதோ சில வார்த்தைகள் தான். முழு கவனமும் Driving ல இருந்திச்சு.முன்னுக்கு போற வாகனம் புழுதியை அள்ளி அடிக்க தெரியிற பாதேல கவனமா ஓடோணும்..அதுவும் கொஞ்சம் வேகமா..ஏற்கனவே லேட் ஆகிடுது. "1.30 கு ஸ்கூல் முடிஞ்சிடும்.கொஞ்சம் வெள்ளன வெளிக்கிட்டு இருக்கலாம்" எண்டு நாங்கள் கதைகிறதை காதில போட்டுகொண்டே முடியுமான இடங்களில 80 இல ஓடினார் கண்ணன் அண்ண..

காலம 6.30கே அந்தாள் வாசல்ல வண்டிய நிப்பாடீடு எங்களுக்காக வெயிட் பண்ணிச்சு. டிரோஷன் அம்மா குடுத்த டீய குடிச்சு கொண்டே மணிகூட்ட அடிகடி பாத்தார்.
நான் என்ன செய்யிறது.எனக்கு ரகேஷ் அண்ண மாதிரி 6.30க்கு செட் ஆகாது. தண்ணி குடிச்சு கிடிச்சு ஆறுதலா தான் போகும்.இவங்கள் 6 பேரும் காக்க குளியல் குளிச்சிட்டு AXE எடுத்து அடிச்சிட்டு வெளிக்கிட்டாங்கள்.கடசியா நான் BRUT. டிரோஷன் வீடு 6 மாசத்துக்கு கழுவ தேவையில்ல.

ஷர்ட் ஐ டவுசருக்குள்ள விட்டுட்டு அவசரவசரமா சப்பாத்தை மாட்டீட்டு நிமிந்து பாத்தா தவா அண்ண மாத்திரம் ஏதோ நண்பன் படம் பாக்க சினி சிட்டி கு வெளிக்கிட்டது போல வெளிக்கிட்டு நிண்டார்.ஆனா அவர் வெளிநாட்டு Brand( perfume ஐ சொன்னன்).டிரோஷன் ல மட்டும் அதே lifebouy வாசம்..ஒரு மாதிரி 7.30 க்கு கண்ணன் அண்ண அங்க இருந்து வண்டிய கிளப்பினார்.நிப்பாடினது பிள்ளையார் கோயில் வாசலில. ஒரு பெரிய விஷயம் சாதிகிரதுக்கான ஒரு தொடக்க புள்ளி வைக்க போரம். பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கத்தான் போறார்.முன்னுக்கிருந்த ராகேஷ் அண்ண அவசராவசரமா இரங்கி போகேக்க நான் நினைச்சது இதுதான்.

தேங்காபூ சம்பலூட 10 தோசை கட்டிக்கொண்டு வந்திச்சு மனுஷன். ஐயர் நெட்வேர்க்ட மகிமை 2 தோசை உள்ள இறங்கும் போது தெரிஞ்சிச்சு. நாமளும் ஊருக்கு ஊர் ஒரு branch வச்சிருந்தா போற இடத்தில சாப்பாட்டுக்கு பஞ்சம் இருக்காது. அங்க இருந்து வானை கிளப்பிக்கொண்டு புழுதி ஓட்டம் ஓட ரெடி ஆனார் கண்ணன் அண்ண.

அடுத்த 2 1/2 மனித்தியாலங்கள்ள இவங்கள் அடிச்ச மொக்க ஜோக்குகளுக்கு சிரிச்சதில மொத்த வானுமே என்ஜினோட சேர்ந்து அதிர்ந்திருக்கும். ஆனா கண்ணன் அண்ண சிட்டி ரோபோ.

முருகண்டில முட்டினத்தை இறகிரதுக்கு நிப்பாடுரதுக்குள்ள 7 பேரும் கதைச்சு முடிச்சிட்டம். அண்டய பொழுது எப்பிடி போகபோகுது எண்டு.

ஜன்னலுகுள்லாலா மூஞ்சில அடிக்கிற புழிதிக்கு ஜன்னல மூடுறதும் திறகிரதுமா இருந்தார் .
கண்ணன் அண்ணட மூஞ்சில அடிச்ச புழுதி சீனா காரன் தோண்டின குழில இருந்து வந்தது.

ரோட்டு நீட்டுக்கு தார போட்டு நிரப்பி கொண்டு இருந்தாங்கள். இன்னும் 2 வருசத்தில ரோடு எல்லாம் அந்த மாதிரி இருக்கும் .
ரோட்டு மட்டும் தான்.
மனசில பட்டிச்சு .
அங்கங்க இரும்பு கடைக்கு போடவேண்டிய நிலமேல சில வாகனங்கள். அழகா பராமரிக்கிற camp எண்டு எல்லாத்தையும் கண்ணாலையே கிளிக் பண்ணிக்கொண்டு வந்தன். பின்னால சுதா அண்ண யும் மத்தவங்களும் செயல்திட்டங்கள் ஒவ்வொண்டையும் கோர்வையாக்கிகொண்டு இருந்திச்சினம்.

ஆபீஸ் முடிஞ்சு 7.30 கு வீட்டுக்கு போயிடு அவசரவசரமா கிடந்த உடுப்புக்களை எடுத்து Bagகுள்ள தள்ளிட்டு ராத்திரி ரெயின் பிடிச்சு, அந்த சாஞ்ச seat ல நித்திரை வராம அவஸ்தை பட்டத்துக்கு கொஞ்ச நேரம் கண் அயர்ந்திடன்.

infra structure ஐ நிறையவே develop பண்ணி அதால வளர்ச்சிய தூண்ட நினைக்கும் போது அந்த வளர்ச்சியும், அனுபவிக்க போற மக்கள்ட எண்ணங்கள், செயல்கள், சம்பாத்திய வழிமுறைகள் கூடவே வளர்ச்சி அடையாட்டி ரெண்டு வளர்ச்சியும் மேட்ச் ஆவாதே.
கடைசி வருஷம் அதிக வாழ்க்கை செலவீனம் கொண்ட மாவட்டம் யாழாம்.
எனக்குள்ள நீயா நானா கோபி கருத்து திணிச்சுகொண்டு இருக்க, கொயாள வந்த வேலைய மட்டும் பாப்பம், அதவிட்டுட்டு ஓவர் ஆ சீன போட்டுட்டு இருக்க எண்டு இன்னொரு நினைப்பு.

கண்ண திறந்து டைம் ஐ பாத்தா 10.30. ஒரு மாதிரி ஸ்கூலுக்கு வந்திட்டம்.

டீ யோடையும் ரோல்ஸ்ஓடையும் ஆரம்பிச்சுது எங்கட வட்ட மேசை மாநாடு. வானை ஓரமா பாக் பண்ணிட்டு கண்ணன் அண்ணையும் எங்களோட சேர்ந்து டீ உறிஞ்சி கொண்டிருந்தார் . தவா அண்ணாவும் சுதா அண்ணாவும் எங்கட செயல்திட்டங்களை ஒவ்வொண்டா அவுக்கத்தொடங்க பத்தாதத்துக்கு டீச்சேர்ஸ்மாரும் அவயளுண்ட எதிர் பார்ப்புக்களை ஒவ்வொண்டா அடுக்கத்தொடன்கிச்சினம்.

கப்பிண்ட ஓரத்தில ஒழுகின ஒரு துளியை கையாள துடைச்சிட்டு போக்கேட்டுக்குள்ள இருந்த லேஞ்சிய எடுத்து கையதுடைச்சிட்டு அடுத்த சிப். பிறகு அடுத்த சிப் . அதுக்கு பிறகு அடுத்த சிப்.
டீ முடிச்சுது. எங்கட discussion உம்.
ஆனா ரோல்ஸ் ரெண்டு மிச்சம் இருந்திச்சு. ஒண்ட நான் எடுத்துக்கொண்டு மத்தத கண்ணன் அண்ணட குடுத்தன். கடிச்சுக்கொண்டே பக்கத்தில இருந்த டீச்சர் ட இங்க எல்லார்ட சம்பாத்தியமும் என்ன மாதிரி..
"என்னத்தை சொல்றது.எல்லாம் லோன் ல ஓடுது . கறிக்கு நடுவில மாட்டுப்பட்ட தும்ப கையால எடுத்து போட்டுட்டு,கண்ணன் அண்ணட அடுத்த கடி.
டீச்சேர்ஸ்மாருக்கு பாங்க்ல லோன் குடுகிரான்கள். லோன் லையே வாழ்க்கை". அப்ப கிளிநொச்சி யாழ்ப்பாணத்தை அடுத்த 2,3 வருசத்தில முன்தீடும். எனக்குள்ள திரும்பவும்.

கைய துடைச்சிட்டு கிளம்பீடார். அடுத்தது students ஓட மீட்டிங். கண்ணன் அண்ண வானுக்குள்ள நித்திரை. 2 மணிக்கு தட்டி எழுப்பினவுடனை வானை ஸ்டார்ட் பண்ணினார். அந்த கறுவல் டீசெரிண்ட டாட்டா வோட வண்டி கிளம்பிச்சு.
வழியில இரணைமடுவில சிங்கள உல்லாச பயணிகளுக்கு இங்கிலீஷ் ல பீட்டர் விட்டதாகட்டும்,ஆர்மிக்காரனுக்கு செச்கின்க்கு பிறகு பச்சத்தூசனத்தில ஏசினதாகட்டும், எங்கட சிரிப்புக்கு அளவே இல்லை.ஆனா அவர் மட்டும் எப்பிடி!!!!!!

அங்க இங்கயெல்லாம் சுத்தீட்டு சரியா 6.30 க்கு கொணந்து இறக்கினார். முதல்ல அடக்கி வச்சத இறக்கிரதுக்கு பாஞ்சு இறங்கினது ராகேஷ் அண்ண. காலமை 6.30 பின்னேரம் 6.30. இது தான் அவருண்ட schedule.

payment ஐ வாங்கீட்டு ‘வாறன் தம்பி’ எண்டுட்டு வானை கிளப்பும் போதே அவருக்குள்ள ஒரு சிரிப்பு. கவனிச்சது நான் மட்டும் தான்.. குழம்பீட்டன். அர்த்தம் புரியேல.

ஆறுதலா யோசிச்சுப்பார்த்தன்.எத்தின அரசியல் வாதிகளும், விளம்பர பிரியர்களும் அத செய்யிறன் இத செய்றன் எண்டு அண்ணாட வான்ன்ல சுத்தீட்டு போயிரிப்பினம்.எங்களையும் அவையல் மாதிரி நினைச்சு சிரிச்சுருப்பார் எண்டு தோணிச்சு.தப்பில்லைத்தானே.

கண்ணன் அண்ணாட சிரிப்புக்காக இல்லாட்டியும்,எல்லாத்தையும் இழந்தா பிறகும், படிக்க வேணும் எண்டு பாடு பட்டு கொண்டிருக்கிற அந்த மாணவர்களுக்காக எங்கட செயல் திட்டங்கள் ஒவ்வொண்டா நல்ல படியா செய்து
முடிக்க வேணும்.

Wings to Fly

You were born with potential
you were born with goodness and trust
you were born with ideas & Dreams
You were born with greatness
you were born with wings
Learn to use them to fly...
- Jalaluddin Rumi