5வது பிளாட்போர்முக்கு ஓடோணும்.நினைப்பெல்லாம் ஒண்டுதான்.எப்பிடியாவது ரயினை பிடிக்கோணும் கடவுளே எண்ட சீட்டை யாருமே பிடிச்சிருக்க கூடாது.எப்பவுமே கடைசிக்கு முதல் பெட்டில தான் ஏறுறது.வாசல்ல இருந்து 2வது ரோல இருக்கும் எண்ட சிம்மாசனம்.
ஜன்னலோரமா ஒரு கண்ணாடி போட்ட அண்ண.உள்ள ஏறுற பிகருகளை பாக்காம எப்பவுமே ஜென்னலுக்கு வெளில பாத்து கொண்டே வருவார்.இயற்கையை ரசிக்கிறாராம...கொயாள அந்த இருட்டுகுள்ள ஒரு மண்ணாங்கட்டியும் தெரியிரதுமில்ல.அதுக்கு பக்கத்தில ஒரு அக்கா.அந்த அக்கா ஏறினதில இருந்து போனோட வழியிறதும் குடையிறதும்..ஐயையையோ...இந்த லவ் பண்ணற பொண்ணுங்க மட்டும் எப்பிடி அடுத்தவங்களுக்கு கேக்காம போன் கதைக்கிராளுகளோ தெரியேல..
அடுத்தது எண்ட சீட்டுக்கு பக்கத்தில ஒரு முதலை வாயன்.அந்த சொங்கி, ரயின் கோர்ன் அடிச்ச உடனை ஒரு கொட்டாவி விடுவான்.ரயின் வெளிக்கிட்டவுடனையே வாய பிளந்துகொண்டு தூங்க தொடங்கிடுவான்.அவன பாக்கேக்கை அவன்ட வாயில கரப்பான் பூச்சிய விட்டா எப்பிடியிருக்கும் எண்டு தோணும்.பன்னிக்கு குறட்ட வேற.வீணீர் வடிக்கேக மட்டும் எழும்பி மற்றப்பக்கம் படுப்பான்.
அங்காலிப்பக்கம் எதிரெதிரா 6பேர்.எதிரா கையுக்கெட்டின தூரதில ஜோதிகா.பச்சைக்கிளி முத்துச்சரம் பாத்ததில இருந்து ரயின்ல நல்ல வடிவான பிகருகள் வந்தா அவங்களுக்கு நான் வைக்கிற பெயருதான் ஜோதிகா.
வேறஎதுக்கு கொஞ்சம் கவனமா இருக்கிரத்துக்குத்தான்.
அதுவும் மூக்குத்தி குத்தியிருந்தா பயங்கர உஷாராகிடுவன்.
ஆனா அவள் மூக்குத்தி குத்திரதில்ல. ஆனா அதுக்காக மட்டும் அவள பாக்கிறது இல்லை. மேல் உதட்டை தாங்கிற மாதிரி அந்த சின்ன கீழ் உதடு.நாக்குப்பட்டு லேசா ஈரமாகி காஞ்ச லிப்ஸ்டிக் ஓட சேர்ந்து ஒரு விதமான லயிட் ரோஸ் கலர்ல இருக்கும்.மேல் உதட்டிக்கு கொஞ்சம் தள்ளி ஒரு குட்டி மச்சம். மூக்கு சொல்ற மாதிரி ஏதும் இல்ல. ஆனா மூக்குத்தி இல்லை.
கண்ணை தாண்டி மூக்கு நுனிய அடிக்கடி வருடுற ஒரு கொத்து முடி. மிச்ச முடியை இறுக்கி போட்டிருக்கிற பொனி டெயில். அவளின்டை முகத்தழக சொல்றத்துக்கே இன்னும் ரெண்டு பதிவு போடலாம். மிச்சத்தை சொல்லப்போனா ஒரு புத்தகமே எழுதலாம்.
கெட்டிக்காரத்தனம் எண்டா என்னெண்டு தெரியுமா. பக்கத்தில பாய் பிரெண்டோட இருக்கிற பிகர அவங்களுக்கு தெரியாம பாகிறதுதான். நான் கெட்டிக்காரன்.அதுதான் காதலுக்கு கண்ணில்லையே.
அவன் என்னைவிட கறுப்பு. ஆனா கலேர்சா இருந்தான். ஆனா முடி மட்டும் பாதீல சூபீட்டு விட்ட பனங்கொட்டை மாதிரி இருந்திச்சு. நானும் மின்சாரகனவு அரவிந்த சாமி மாதிரி தலைய வழிச்சு இழுத்து என்ன பிரயோசனம். ஊரில தேங்கா மண்டையங்களையும் பனங்கொட்டை தலையங்களையும் தான் பொண்ணுங்க பாக்குது.
மரவள்ளி கிழங்கு பொரியல்.ஒரு துண்டு அவளிண்ட வாயில அரைபட மற்ற துண்டை அவனுக்கு ஊட்டிக்கொண்டிருந்தாள்.அவளிண்ட வாயோரமா கொஞ்சமா ஒட்டிக்கொண்டிருந்த மிளகா தூளை புறக்கையால துடைகேக்க பாக்க அழகா இருந்திச்சு.ஆனா அவனின்ட வாயையும் சேர்த்து துடைக்கேக்க மட்டும் ஏன் எனக்கு
கடுப்பாகுது.
ஜன்னல் கரையில பதட்டமா ஒரு அக்கா. "கொட்டுவ"யில இருந்து கொம்பனி வீதி வரைக்கும் வேர்ல்ட் கப் பயினல் பாகிரமாதிரி டென்சனா உட்காந்திருக்கும். கொம்பனி வீதில அந்த குறுந்தாடி வச்ச அண்ணன் ஏறி எதிர்ல உட்காந்த பிறகுதான் இந்தியன் சப்போர்ட்டர் மாதிரி சந்தோசப்படும். அந்த இடத்தில நான் சிறிலங்கன் சப்போர்ட்டர்.
எதிர்ல உலக அரசியல்ல இருந்து உள்ளூர் அரசியல் வரைக்கும் அங்கிள்ஸ் ரெண்டு பேருண்ட ஓர் அலசல்/அலட்டல். அரசியல விட காதல்ல இண்டரெஸ்டிங் என்றதால எனக்கு காதை விட கண்ணுக்குத்தான் வேலை கூட.
இவங்க எல்லாருக்கும் நடுவில நான். இறங்கிறதுக்கு வசதியா வாசலுக்கு பக்கத்திலையே சீட். எல்லாருக்கும் அவங்க அவங்க வேலை. அவங்கட வேலை எல்லாத்தையும் பாத்து ரசிக்கிறது தான் அந்த 30 நிமிஷமும் எண்ட ஒரே வேலை.
இது எங்கட ரோவில மட்டும். முன்னால இருக்கிற பத்து சீட்டிலையும் மங்காத்தா. எனக்கு கேம் எல்லாம் தெரியாது. ஆனா 6.30க்கு ரெயின் வந்தவுடனையே அதில ஒரு குள்ள அண்ண வந்து மத்த எல்லாருக்கும் சீட்டை பிடிச்சிடுவாறு. தற்செயலா அந்த அண்ண லேட் ஆகி வந்து அந்த சீட்ல வேரயாராச்சும் உட்காந்திருந்தா ஒவ்வொருத்தரா வந்து முறைபாங்க பாரு .கொக்கா இருந்த ஏறின்ச்சிருக்கும்.
கடைசியா அவங்க தல வந்து எப்பிடியோ கதைச்சு பேசி இடத்தை பிடிச்சுடுவாங்க.அதுக்கு பிறகு களை கட்டும் மங்காத்தா.
முதல்ல வெளியில தூக்கி போடுறது ஜோக்கேர்சை.அது தான் ஜோகேர்சா இருக்க யாருமே விரும்பிரதில்ல போல.
யோக்கர் கார்ட்சை அந்த குள்ள அண்ண எடுத்து அவர்ட போக்கேட்டுக்குள்ள வச்சிடுவாரு.அவர் இதுவரைக்கும் விளையாடி நான் பாத்ததே இல்லை.
இது தான் எங்கட கம்பார்ட்மென்ட். எங்களுக்குள்ள அப்பிடி ஒரு அண்டேர்ச்டாண்டிங். யாருமே யாரின்ட சீட்டுக்கும் ஆசை பட்டதில்ல.
ஒரு மாசம் கடுமையான வேலை. ஒபிஸ் முடிஞ்சு லேட் ஆ வாறதால ரெயின மிஸ் பண்ணிடுவன். ஒரு மாசம் கழிச்சு இண்டைக்கு தான் அந்த ரெயின பிடிக்க கிடைச்சுது. ரெயின் மெதுவா நகர்ந்து கொண்டிருந்தாலும் ஒரு மாதிரி தாவி ஏறிடன்.
எண்ட சீட் அப்பிடியே இருந்திச்சு. லெப்டில முதல வாயன் குறட்டைய தொடங்கியிருந்தான். முன்னால போன் அக்கா. பக்கத்தில கண்ணாடி அண்ண.2012 பட்ஜெட் மாற்றங்கள் அங்கிள்ஸ் இன் அனல் பறக்கும் அலசல்.ஜன்னல் அக்கா வழமை மாதிரி பதட்டத்தோட இருந்தா. சரி நாங்க வந்த வேலைய பாப்பம்.
மூக்கு நுனிய வருடி விடுற கொத்து முடி,ஹேர் ஸ்டைல் மாறேல.அதே மரவள்ளி கிழங்கு பொரியல்.ஏன் ஜோதிகா ஒவ்வொரு நாளும் மரவள்ளி சாபிட்டா காஸ் ட்ரபிள் வருமாமே உண்மையா..
கறுக்கு முருக்கேண்டு வாயில அரை பட்டு பளிங்கு மாதிரி இருக்கிற தொண்டையில இறங்கிறது தனியா தெரியும். லேசா விழுங்கினாலும் அந்த கண் ரெண்டையும் நெத்தியோட சேர்த்து சுருக்கி விழுங்கிறன் எண்டிறதை காட்டிற மாதிரி இருக்கும்.
பொதுவாவே அவள் அவனுக்கு ஊட்டி விடும் போது அவள் குடுக்கிற எச்பிரசன்ஐ மட்டும் தான் பாக்கிறது. ஆனா அண்டைக்கு மட்டும் ஏதோ அவனையும் பாத்தன். திரும்பவும் பாத்தன். கண் வட்டாம பாத்தன். அமைப்பான முகம். லேசா தாடை முழுக்க படர்ந்திருக்கிற தளிர் தாடி. நல்ல வாட்ட சாட்டமான உடம்பு. ஆளே மாறி இருந்தான். அவனா இவன் சம்பந்தமே இல்லையே.
எனக்கு ஒருவேளை "ஜமாஸ் வு "வோ
..இல்ல. அவன் பனங்கொட்டை தலையன். இவன் முள்ளு முள்ளு தலையன். ரெண்டு தலையும் வித்தியாசம்.எப்பிடி இது சாத்தியம்.அவளண்ட கொத்து முடி மாறேல, மரவள்ளி மாறேல, சீட் மாறேல. கம்பார்ட்மென்ட் மாறேல. அவன் மாறீட்டான். .இல்லை.அவள் மாறீட்டாள்.
பக்கத்து அங்கிள்ஸ் கதைக்கிற அரசியல விட பயங்கர குழப்பமா இருந்திச்சு. சுத்தியிருந்த ரெயின் மேட்ஸ் இத கண்டு கொண்டதா தெரியேல. கம்பார்ட்மென்ட் மாறாட்டியும் பரவாயில்ல,சீட்டை மாத்தாடியும் பரவாயில்ல. அட்லீஸ்ட் மரவள்ளியையாவது மாத்தியிருக்கலாம்.இப்பிடிஎல்லாமா உலகத்தில சாத்தியம்.
யெஸ்.. காதல்ல எதுவுமே சாத்தியம்.
உண்மையில இப்பத்தான் பக்கத்தில நடக்கிறதை சுத்தி பாக்கும் போது கடுப்பாகுது. முதலவாயன், இருட்டை ரசிகிரவன். போன் அக்கா. அரசியல் அங்கிள்ஸ் எண்டு அவரவர் அவரவர்ட வேலை. நான் மட்டும்??
வாழ்க்கேல தங்க தங்க வேலைய மட்டும் பாத்திட்டு இருக்கிறவங்களுக்கு எந்த வித குழப்பமும் இல்லை போல.
கொம்பனி வீதி ஸ்டேசனை நோக்கி ரெயின் நகர்ந்து கொண்டிருந்திச்சு. இப்ப நான் வேர்ல்ட் கப் பயினல்ல உட்கார்ந்திருந்தன்.
ஏறப்போறது யாரு. குறுந்தாடி அண்ணனா. இல்ல...ஒருவேளை அக்காவும் மாறியிருந்தா!!!
குறுந்தாடி அண்ண வந்து அக்காக்கு பக்கத்தில உட்கார்ந்த போது ஏதோ எனக்கே லவ் செட் ஆனா மாதிரி ஒரு பீலிங்கு. இப்ப நான் இந்தியா டீம்.
ரெயின் மூவ் பண்ண தொடன்கீச்சு. நான் ஏறும்போதே கவனிச்சன். பக்கத்து பெட்டில லேசா ஒரு சலசலப்பு இருந்திச்சு. கொஞ்சம் சத்தமாக நான் திரும்பி பாத்தன். ஒருத்தன் மட்டும் ஆவேசமா நடந்து வந்து எண்ட ஜோதிகாவ பாத்து ஆவேசமா சிங்களத்தில கத்தத்தொடங்கினான்.
மனசில தமிழ் சப் டயட்டில் ஓடிக்கொண்டு இருந்திச்சு.
"ஏண்டி இப்பிடி பண்ணினா. இவன தானே லவ் பண்ணீட்டு திரிஞ்ச. இப்ப இவன பிடிக்கேல எண்டுட்டு இன்னொருத்தனோட இருக்க. சாகிற லெவலுக்கு போயிட்டான்". பின்னுக்கு பனங்கொட்டை தலையன் பம்மீட்டு வேணாம் வேணாம் எண்டு தடுத்துட்டு நின்னான்.
அரக்கைக்கு மடிச்சிருந்த புல் கை ஷர்ட்ஐ அடிக்கடி இழுத்து விட்டுக்கொண்டு முள்ளு முள்ளு தலையனும் அவனை தடுத்துக்கொண்டு என்ன செய்யிற எண்டு தெரியாம ஜோதிகா. அரசியல் பேச்சு நின்டிருந்திச்சு. போனும் நின்டிருந்திச்சு. குறட்டை மட்டும் நிக்கேல. சப் டயிட்டில் தொடர்ந்திச்சு. "மச்சான் இவள நம்பாத. எண்ட பிரண்ட மாதிரி உனக்கும் பூட்ஐ வச்சிடுவாள். சாமான் கேசுடா இவள்".
சொல்லி முடிச்சொன ..
"என்ன பிரச்சனை என்ன பிரச்சனை".. முதல்ல பாஞ்ச்சு வந்தது ஜோக்கர் அண்ண. கத்தலை ஒரு மாதிரி சமாதான படுத்திக்கொண்டு அடுத்த கம்பார்ட்மென்ட் வரைக்கும் அவங்கள இழுத்திட்டு போனது அவர் தான். ஜோகேர்ஸ் ஹீரோ ஆக கூடாது எண்டு சட்டமா என்ன..
இருட்டு வேடிக்கை, போன், குறட்டை எல்லாமே தொடர்ந்திச்சு. ஜன்னல் அக்காவ அந்த குறுந்தாடி அண்ண பாத்த அந்த பார்வைதான் ஹையிலயிட். இவ எனக்கு எப்ப பிம்பிலிக்கா பிளாப்பி சொல்லப்போறாலோ...
தலையில கையை வச்சு லேசா தலைய தோளில சாச்சுக்கொண்டான் முள்ளு முள்ளு தலையன். ஜோதிகாகு முகம் முழுக்க சிவப்பா இருந்திச்சு. கவலையில கூட செம்மையா இருக்கிறாள்.
எல்லாமே பழைய நிலைமைக்கு திரும்பீடுது. எண்ட மனசு மட்டும் சம்பவத்துக்கு காரணம் தேட தொடங்கீட்டுது.
ஒரு பொண்ணு ஐஸ்கிரீம் சாப்பிடுரதையோ, கைய ஆட்டியாட்டி பேசுறதையோ, புருவத்தை சுருக்கி சிரிக்கிரதையோ பாத்து பிடிச்சு இருக்கு எண்ட நினைப்பில ரோஸ்ஐ நீட்டீரானுகள். அதே அழகை நிச்சயமா அவன் இன்னொரு பொன்னிட்ட கட்டாயம் கொஞ்ச நாளில பாப்பான். இன்னும் கொஞ்ச நாளில இன்னொரு பொன்னிட்ட.இப்பிடி அழகா தெரியிற எல்லாரையுமா லவ்வராக்க முடியும்.
கடசீல பாத்தா ரோஸ் குடுக்க முதல் பாத்தா அந்த ஒண்டு ரெண்டு விஷயம் மட்டும் தான் அவள்ல பிடிச்சே இருக்கும். பிடிக்காத விஷயம் நிறைய இருக்கும்.
இது தான் பாத்த உடன வருற லவ்வுக்கும் பழகி பாத்து வருற லவ்வுக்கும் உள்ள வித்தியாசம்.
நான் ஒன்னும் பொண்ணுங்க விசயத்திலையோ காதலிலையோ ஸ்பெசலிஸ்ட் எல்லாம் கிடையாது. எத்தின பிரண்ட்ஸ் இட காதல பாத்திருப்பம். அத விட எத்தினை சினிமா பாத்திருப்பம் .
அது தான் சொல்லுறன் பாயிஸ் பதினாலந்திகதி, ஐஸ்கிரீம் சாபிடேக்க அழகா இருந்தாள். மூக்கு சீரேக்க அழகா இருந்தாள் எண்டு அவசர பட்டு யாருக்காவது ரோசை நீட்டிநீங்க.. அப்புறம் உங்களுக்கும் பிம்பிலிக்கா பிளாப்பி தான்.
Saturday, February 11, 2012
Subscribe to:
Comments (Atom)
