வெறும் காத்துதாங்க வருது எண்டு ரேவதி சொல்ற மாதிரி வாய்ஸ் தான் அவர்ட ரியல் வாய்ஸ்.எங்களோட கதைச்சதோ சில வார்த்தைகள் தான். முழு கவனமும் Driving ல இருந்திச்சு.முன்னுக்கு போற வாகனம் புழுதியை அள்ளி அடிக்க தெரியிற பாதேல கவனமா ஓடோணும்..அதுவும் கொஞ்சம் வேகமா..ஏற்கனவே லேட் ஆகிடுது. "1.30 கு ஸ்கூல் முடிஞ்சிடும்.கொஞ்சம் வெள்ளன வெளிக்கிட்டு இருக்கலாம்" எண்டு நாங்கள் கதைகிறதை காதில போட்டுகொண்டே முடியுமான இடங்களில 80 இல ஓடினார் கண்ணன் அண்ண..
காலம 6.30கே அந்தாள் வாசல்ல வண்டிய நிப்பாடீடு எங்களுக்காக வெயிட் பண்ணிச்சு. டிரோஷன் அம்மா குடுத்த டீய குடிச்சு கொண்டே மணிகூட்ட அடிகடி பாத்தார்.
நான் என்ன செய்யிறது.எனக்கு ரகேஷ் அண்ண மாதிரி 6.30க்கு செட் ஆகாது. தண்ணி குடிச்சு கிடிச்சு ஆறுதலா தான் போகும்.இவங்கள் 6 பேரும் காக்க குளியல் குளிச்சிட்டு AXE எடுத்து அடிச்சிட்டு வெளிக்கிட்டாங்கள்.கடசியா நான் BRUT. டிரோஷன் வீடு 6 மாசத்துக்கு கழுவ தேவையில்ல.
ஷர்ட் ஐ டவுசருக்குள்ள விட்டுட்டு அவசரவசரமா சப்பாத்தை மாட்டீட்டு நிமிந்து பாத்தா தவா அண்ண மாத்திரம் ஏதோ நண்பன் படம் பாக்க சினி சிட்டி கு வெளிக்கிட்டது போல வெளிக்கிட்டு நிண்டார்.ஆனா அவர் வெளிநாட்டு Brand( perfume ஐ சொன்னன்).டிரோஷன் ல மட்டும் அதே lifebouy வாசம்..ஒரு மாதிரி 7.30 க்கு கண்ணன் அண்ண அங்க இருந்து வண்டிய கிளப்பினார்.நிப்பாடினது பிள்ளையார் கோயில் வாசலில. ஒரு பெரிய விஷயம் சாதிகிரதுக்கான ஒரு தொடக்க புள்ளி வைக்க போரம். பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கத்தான் போறார்.முன்னுக்கிருந்த ராகேஷ் அண்ண அவசராவசரமா இரங்கி போகேக்க நான் நினைச்சது இதுதான்.
தேங்காபூ சம்பலூட 10 தோசை கட்டிக்கொண்டு வந்திச்சு மனுஷன். ஐயர் நெட்வேர்க்ட மகிமை 2 தோசை உள்ள இறங்கும் போது தெரிஞ்சிச்சு. நாமளும் ஊருக்கு ஊர் ஒரு branch வச்சிருந்தா போற இடத்தில சாப்பாட்டுக்கு பஞ்சம் இருக்காது. அங்க இருந்து வானை கிளப்பிக்கொண்டு புழுதி ஓட்டம் ஓட ரெடி ஆனார் கண்ணன் அண்ண.
அடுத்த 2 1/2 மனித்தியாலங்கள்ள இவங்கள் அடிச்ச மொக்க ஜோக்குகளுக்கு சிரிச்சதில மொத்த வானுமே என்ஜினோட சேர்ந்து அதிர்ந்திருக்கும். ஆனா கண்ணன் அண்ண சிட்டி ரோபோ.
முருகண்டில முட்டினத்தை இறகிரதுக்கு நிப்பாடுரதுக்குள்ள 7 பேரும் கதைச்சு முடிச்சிட்டம். அண்டய பொழுது எப்பிடி போகபோகுது எண்டு.
ஜன்னலுகுள்லாலா மூஞ்சில அடிக்கிற புழிதிக்கு ஜன்னல மூடுறதும் திறகிரதுமா இருந்தார் .
கண்ணன் அண்ணட மூஞ்சில அடிச்ச புழுதி சீனா காரன் தோண்டின குழில இருந்து வந்தது.
ரோட்டு நீட்டுக்கு தார போட்டு நிரப்பி கொண்டு இருந்தாங்கள். இன்னும் 2 வருசத்தில ரோடு எல்லாம் அந்த மாதிரி இருக்கும் .
ரோட்டு மட்டும் தான்.
மனசில பட்டிச்சு .
அங்கங்க இரும்பு கடைக்கு போடவேண்டிய நிலமேல சில வாகனங்கள். அழகா பராமரிக்கிற camp எண்டு எல்லாத்தையும் கண்ணாலையே கிளிக் பண்ணிக்கொண்டு வந்தன். பின்னால சுதா அண்ண யும் மத்தவங்களும் செயல்திட்டங்கள் ஒவ்வொண்டையும் கோர்வையாக்கிகொண்டு இருந்திச்சினம்.
ஆபீஸ் முடிஞ்சு 7.30 கு வீட்டுக்கு போயிடு அவசரவசரமா கிடந்த உடுப்புக்களை எடுத்து Bagகுள்ள தள்ளிட்டு ராத்திரி ரெயின் பிடிச்சு, அந்த சாஞ்ச seat ல நித்திரை வராம அவஸ்தை பட்டத்துக்கு கொஞ்ச நேரம் கண் அயர்ந்திடன்.
infra structure ஐ நிறையவே develop பண்ணி அதால வளர்ச்சிய தூண்ட நினைக்கும் போது அந்த வளர்ச்சியும், அனுபவிக்க போற மக்கள்ட எண்ணங்கள், செயல்கள், சம்பாத்திய வழிமுறைகள் கூடவே வளர்ச்சி அடையாட்டி ரெண்டு வளர்ச்சியும் மேட்ச் ஆவாதே.
கடைசி வருஷம் அதிக வாழ்க்கை செலவீனம் கொண்ட மாவட்டம் யாழாம்.
எனக்குள்ள நீயா நானா கோபி கருத்து திணிச்சுகொண்டு இருக்க, கொயாள வந்த வேலைய மட்டும் பாப்பம், அதவிட்டுட்டு ஓவர் ஆ சீன போட்டுட்டு இருக்க எண்டு இன்னொரு நினைப்பு.
கண்ண திறந்து டைம் ஐ பாத்தா 10.30. ஒரு மாதிரி ஸ்கூலுக்கு வந்திட்டம்.
டீ யோடையும் ரோல்ஸ்ஓடையும் ஆரம்பிச்சுது எங்கட வட்ட மேசை மாநாடு. வானை ஓரமா பாக் பண்ணிட்டு கண்ணன் அண்ணையும் எங்களோட சேர்ந்து டீ உறிஞ்சி கொண்டிருந்தார் . தவா அண்ணாவும் சுதா அண்ணாவும் எங்கட செயல்திட்டங்களை ஒவ்வொண்டா அவுக்கத்தொடங்க பத்தாதத்துக்கு டீச்சேர்ஸ்மாரும் அவயளுண்ட எதிர் பார்ப்புக்களை ஒவ்வொண்டா அடுக்கத்தொடன்கிச்சினம்.
கப்பிண்ட ஓரத்தில ஒழுகின ஒரு துளியை கையாள துடைச்சிட்டு போக்கேட்டுக்குள்ள இருந்த லேஞ்சிய எடுத்து கையதுடைச்சிட்டு அடுத்த சிப். பிறகு அடுத்த சிப் . அதுக்கு பிறகு அடுத்த சிப்.
டீ முடிச்சுது. எங்கட discussion உம்.
ஆனா ரோல்ஸ் ரெண்டு மிச்சம் இருந்திச்சு. ஒண்ட நான் எடுத்துக்கொண்டு மத்தத கண்ணன் அண்ணட குடுத்தன். கடிச்சுக்கொண்டே பக்கத்தில இருந்த டீச்சர் ட இங்க எல்லார்ட சம்பாத்தியமும் என்ன மாதிரி..
"என்னத்தை சொல்றது.எல்லாம் லோன் ல ஓடுது . கறிக்கு நடுவில மாட்டுப்பட்ட தும்ப கையால எடுத்து போட்டுட்டு,கண்ணன் அண்ணட அடுத்த கடி.
டீச்சேர்ஸ்மாருக்கு பாங்க்ல லோன் குடுகிரான்கள். லோன் லையே வாழ்க்கை". அப்ப கிளிநொச்சி யாழ்ப்பாணத்தை அடுத்த 2,3 வருசத்தில முன்தீடும். எனக்குள்ள திரும்பவும்.
கைய துடைச்சிட்டு கிளம்பீடார். அடுத்தது students ஓட மீட்டிங். கண்ணன் அண்ண வானுக்குள்ள நித்திரை. 2 மணிக்கு தட்டி எழுப்பினவுடனை வானை ஸ்டார்ட் பண்ணினார். அந்த கறுவல் டீசெரிண்ட டாட்டா வோட வண்டி கிளம்பிச்சு.
வழியில இரணைமடுவில சிங்கள உல்லாச பயணிகளுக்கு இங்கிலீஷ் ல பீட்டர் விட்டதாகட்டும்,ஆர்மிக்காரனுக்கு செச்கின்க்கு பிறகு பச்சத்தூசனத்தில ஏசினதாகட்டும், எங்கட சிரிப்புக்கு அளவே இல்லை.ஆனா அவர் மட்டும் எப்பிடி!!!!!!
அங்க இங்கயெல்லாம் சுத்தீட்டு சரியா 6.30 க்கு கொணந்து இறக்கினார். முதல்ல அடக்கி வச்சத இறக்கிரதுக்கு பாஞ்சு இறங்கினது ராகேஷ் அண்ண. காலமை 6.30 பின்னேரம் 6.30. இது தான் அவருண்ட schedule.
payment ஐ வாங்கீட்டு ‘வாறன் தம்பி’ எண்டுட்டு வானை கிளப்பும் போதே அவருக்குள்ள ஒரு சிரிப்பு. கவனிச்சது நான் மட்டும் தான்.. குழம்பீட்டன். அர்த்தம் புரியேல.
ஆறுதலா யோசிச்சுப்பார்த்தன்.எத்தின அரசியல் வாதிகளும், விளம்பர பிரியர்களும் அத செய்யிறன் இத செய்றன் எண்டு அண்ணாட வான்ன்ல சுத்தீட்டு போயிரிப்பினம்.எங்களையும் அவையல் மாதிரி நினைச்சு சிரிச்சுருப்பார் எண்டு தோணிச்சு.தப்பில்லைத்தானே.
கண்ணன் அண்ணாட சிரிப்புக்காக இல்லாட்டியும்,எல்லாத்தையும் இழந்தா பிறகும், படிக்க வேணும் எண்டு பாடு பட்டு கொண்டிருக்கிற அந்த மாணவர்களுக்காக எங்கட செயல் திட்டங்கள் ஒவ்வொண்டா நல்ல படியா செய்து
முடிக்க வேணும்.
Wings to Fly
You were born with potential
you were born with goodness and trust
you were born with ideas & Dreams
You were born with greatness
you were born with wings
Learn to use them to fly...
- Jalaluddin Rumi
Subscribe to:
Post Comments (Atom)

ம்ம்ம்ம்!!
ReplyDeleteமது ஒரு அலம்பல் பதிவு எழுதியிருக்கிறான் எண்டு நினச்சுக்கொண்டே வாசிச்சன். ஆனால் ஒரு சீரியசான விஷயத்த முடிவா வெச்சு பதிவின் தரத்த சில வரிகளில உயர்த்தினதுக்கு hats off!!
ReplyDelete''டிரோஷன் ல மட்டும் அதே lifebouy வாசம்''
-Excellent.
thanks mynthan...
ReplyDelete& thanks da usman.
கண்ணன் அண்ணன்ற சிரிப்பில எவ்வளவு அர்த்தம் இருக்கும்????
ReplyDeleteஓவருத்தருக்கும் ஒவ்வெரு பீலிங் மது.......
நல்லா இர்ருக்கு.....
நல்லா இருக்கு.......
ReplyDeleteசிவராத்ரிக்கு முநேச்வரம் போன நேரமும் இந்த 6.3 நிகழ்ச்சி நடந்தது ..........
ராகேஷ் தான் கதா நாயகன் ....
Super da!!!
ReplyDeleteBut kannan anna sirichathu Raakesda nilamaya yosichu!!!
தாங்க்ஸ் துவா அக்கா , வினோத் அண்ணா.. இப்ப எனக்கே டவுட் வந்திட்டுது இந்த கதையில ஹீரோ கண்ணன் அண்ணாவா இல்ல ராகேஷ் அண்ணாவா எண்டு...ஓ காட் வ்ஹாட் எ கன்புசியன்....வ்ஹாட் எ கன்புசியன்..
ReplyDelete